Published : 09 Jun 2023 05:09 PM
Last Updated : 09 Jun 2023 05:09 PM
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து எம்டிசி பேருந்துகளை இயக்க இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்து "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.
இந்தப் பேருந்து முனையத்திலிருந்து, தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும், அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாகவும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மற்றும் வனத் துறையுடன் ஒருங்கிணைந்த ஆலோசனைக் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. மேலும், கிளாம்பாக்கம் புதிய புறநகர் முனையத்திலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை – போலீஸ் அகாடெமி சாலை – நல்லம்பாக்கம் சாலை – ஊனமாஞ்சேரி – ஜி.எஸ்.டி சாலை ஊரபாக்கம் வழியாகவும் மற்றும் கூடுவாஞ்சேரி – மாடம்பாக்கம் சாலை – ஆதனுர் நெடுஞ்சாலை முதல் மாடம்பாக்கம் சாலை – யூனியன் சாலை – வண்டலுர் – வாலாஜாபாத் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT