Published : 09 Jun 2023 11:40 AM
Last Updated : 09 Jun 2023 11:40 AM

ஜூன் 13-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக கூட்டம் | கோப்புப் படம்

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமாகிய எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 13.06.2023 – செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x