Last Updated : 22 Oct, 2017 01:42 PM

 

Published : 22 Oct 2017 01:42 PM
Last Updated : 22 Oct 2017 01:42 PM

திங்கட்கிழமை அனுஷ நட்சத்திரம்: மகா பெரியவாளை வணங்குவோம்!

நடமாடும் தெய்வம் என்றும் காஞ்சி மகான் என்றும் போற்றப்படுபவர் மகா பெரியவா. இவர் வழங்கிய ஒவ்வொரு வார்த்தையும் தெய்வத்தின் குரலெனப் போற்றி ஆராதிக்கப்படுகிறது.

காஞ்சி மகா பெரியவாளின் ஜன்ம நட்சத்திரம் அனுஷம். மாதந்தோறும் வருகிற அனுஷ நட்சத்திர நாளில், கண்கண்ட தெய்வமாகத் திகழும் காஞ்சி மகானை ஆராதனை செய்து, வணங்கிப் போற்றினால், குருவருளும் நிச்சயம்; திருவருளும் உறுதி.

நாளை (திங்கட்கிழமை) இதை சோம வாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு உரிய நன்னாள். ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் பூஜையை அனுஷ்டித்த காஞ்சி மகானின் அனுஷ நட்சத்திரமும் சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையும் இணைந்து வருவது இன்னும் விசேஷம்.

எனவே இந்த அனுஷ நட்சத்திர நாளில், காஞ்சி மகானை வணங்குவோம். அவரின் திருவுருவப் படத்துக்கோ அல்லது விக்கிரகத் திருமேனிக்கோ, வெண்மை நிற மலர்களாலும் தாமரைப் பூக்களாலும் அலங்கரித்து ஆத்மார்த்தமாக பிரார்த்திப்போம்! குருவை வணங்கினால், இறைவனே மகிழ்வான். மகிழ்ந்து அருள்வான்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x