Published : 07 Jun 2023 11:57 AM
Last Updated : 07 Jun 2023 11:57 AM
சென்னை: சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் 28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு 14.06.2023 மற்றும் 15.06.2023 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் 14 மணி வரை சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
28.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT