Published : 06 Jun 2023 01:49 PM
Last Updated : 06 Jun 2023 01:49 PM

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது.

கும்பகோண தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டையொட்டி, அந்த அலுவலகம் முன் அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கினார்.

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன், பொது மேலாளர் முகமது நாசர், ஒன்றியச் செயலாளர்கள் தி.கணேசன்,ஜெ.சுதாகர், தொ.மு.ச. மத்திய சங்கத் தலைவர் கோ.சங்கரன், துணைத் தலைவர் பி.சுரேஷ், பொருளாளர் எஸ்.திருவரசமூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் வீரமணி மற்றும் பலர் பங்கேற்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x