Last Updated : 03 Oct, 2017 07:23 PM

 

Published : 03 Oct 2017 07:23 PM
Last Updated : 03 Oct 2017 07:23 PM

பேசும் படங்கள்: குப்பைகளை அகற்றாமல் அலட்சியம் காட்டும் சென்னை மாநகராட்சி

டெங்கு, மர்மக்காய்ச்சல் உயிரிழப்புகள் தமிழகம் முழுதும் வாட்டிக்கொண்டிருக்க தலைநகர் சென்னையில் பொதுமக்கள், நோயாளிகள் அதிகம் புழங்கும் மையமான திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பெல்ஸ் சாலை, மகப்பேறு மற்றும் பொது மருத்துவமனை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ள கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையைச் சுற்றி குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.

நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையே நோய் பரப்பும் மையமாக மாறியுள்ளதை பார்த்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை மேய்வதற்கு வரும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறும் விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் மாநகராட்சியின் பிரிவும், குப்பைகளை அகற்றாமல் அலட்சியம் காட்டும் சென்னை மாநகராட்சி துப்புரவுப்பணி அதிகாரிகளும் இதை சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. குப்பை அகற்றும் பணியில் சென்னை முழுவதும் மெத்தனமாக நடக்கிறது எனபதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

 

பேசும் படங்கள்:

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x