Published : 26 Jul 2014 09:35 AM
Last Updated : 26 Jul 2014 09:35 AM

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை 7 மி.மீ. மழை பதிவாகியது. அடையாறு, கே.கே.நகர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் 4 செ.மீ., வால்பாறையில் 3 செ.மீ., நடுவட்டம், தேவலாவில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x