Published : 06 Jul 2014 09:00 AM
Last Updated : 06 Jul 2014 09:00 AM

மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி நிர்ணயத்தில் குழப்பம்: நுகர்வோர் அலைச்சலைத் தடுக்க தெளிவான வழிகாட்டுதல் தேவை

மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதால் மின் நுகர்வோர் கடும் அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ள னர். எனவே கணினி வழி மின் கட்டண முறையில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் கணக்கிடப்பட்ட நாள்முதல் 20 நாட் களுக்குள் கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். அதற்கு மேல் செலுத்த வேண்டுமென்றால் மின் இணைப்புத் துண்டிப்பு மீட்புக் கட்டணம் ரூ.60 செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

கணக்கீட்டாளர்கள் கையடக்க மின்னணுக் கருவி மூலம் மின் கட்டண கணக்கீடு மேற்கொள்கின்றனர். கணக்கீட்டாளர்கள் தினமும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் கணக்கீட்டு பணியில் ஈடுபடுகின்றனர். பின்னர், தங்களின் கையடக்கக் கருவியில் பதிவான கணக்கீட்டு விவரங்களை அந்தந்த பிரிவு அலுவலகங்களிலுள்ள கணினியில் மாலை 4 மணிக்குப் பின்னர்அல்லது மறுநாள் அல்லது அதற்கும் மறு நாள் பதிவேற்றம் செய்கின்றனர்.

ஆனால், மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான 20 நாட்கள் அவகாசம், கணக்கீட்டாளர் கணக்கீடு குறித்த நிமிடத்திலிருந்து தொடங்கி விடுகிறது. கணக்கீடு எடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ மின் நுகர்வோர் பணம் செலுத்த சென்றால் கட்டண வசூல் மையங்களில் கணக்கீடு விவரம், இன்னும் பதிவேற் றம் செய்யவில்லை என்று கூறி மறுநாள் அல்லது அதற்கு மறு நாள் வருமாறு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதேபோல் இணையத் தளம் மூலம் பணம் கட்டும் வசதியிலும், தபால் அலுவலகம், சிட்டி வங்கி, மொபைல் போன் மூலம் பணம் செலுத்துவதும் தள்ளிப் போகிறது.

மின் கணக்கீடு எடுத்த நாளுக்கு மறு நாள் அல்லது அதற்கு மறு நாள் அரசு விடுமுறை அல்லது உள்ளூர் விடுமுறையாக இருந்தால் அதற்கு மறு நாள்தான் மின் கணக்கீடு கணினியில் பதிவேற்றப்படுகிறது. இதனால் பதிவேற்றத்துக்கு தாமத மாகும் இந்த நாட்கள், கட்டணம் செலுத்துவதற்கான 20 நாள் கால அவகாசத்தில் விரயமாகும் நாட்களாகவே உள்ளன. எனவே, கணினியில் பதிவேற் றும் நாள் முதல் 20 நாட்கள் என்ற கால அவகாசம் வேண்டுமென்று நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகர் வோர் முற்போக்கு மைய ஒருங் கிணைப்பாளர் சடகோபன் கூறிய தாவது: பொதுவாக பி.எஸ்.என்.எல்., அல்லது வேறு டெலிபோன் நிறு வனங்கள் போன்றவற்றில் கட்டணக் கணக்கீடுக்கான பில்லில், பில்லிங் தேதி மற்றும் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், மின் கட்டண கணக்கீடு ரசீதில் கட்டணம் செலுத்த கடைசி தேதியுடன், பில்லிங் தேதியும் இருக்க வேண்டும். இந்த தேதி இருந்தால் மட்டுமே பிற்காலத்தில் நுகர்வோர் தங்களது மின் கட்டணம் தொடர்பாக சட்டரீதியான மனுக்கள் தாக்கல் செய்யும் போது அவை நியாயமாக நுகர்வோரின் உரிமையை நிலைநாட்ட ஏதுவாக இருக்கும்.

மின் கட்டண கணக்கீடு பதிவுகள் கணினியில் ஏற்றம் செய்யும் நாள்முதல், 20 நாள் கணக்கீடு என்ற முறையைக் கொண்டு வர வேண்டும். இதுகுறித்து மின் துறை தெளிவான வழிகாட்டுதல்களை மின் துறையினருக்கு வழங்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் ஞாயிறு இல்லாமல் மற்ற அரசு விடுமுறை நாளாக இருக்கும் போது அதற்கு மறு வேலை நாளில், மின் கட்டணம் செலுத்த சென்றாலும் மின் இணைப்பை துண்டிக்காமலே மின் இணைப்பு துண்டிப்பு மீட்புத் தொகை வசூலிப்பதாக நுகர்வோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மின் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, கடைசி தேதி நிர்ணயம் தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலித்து வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x