Published : 12 Sep 2024 06:12 AM
Last Updated : 12 Sep 2024 06:12 AM

ப்ரீமியம்
சமூகப் பொறியாளர்கள் - 10: வேர்களைக் குணமாக்கும் மருத்துவர்!

அரசு கால்நடை மருத்துவரும் ‘மக்கள் களப் பணி இயக்க’த்தின் ஆலோசகருமான ரவிசங்கர் வேலூர் மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார். பொதுவாகச் சமூக சேவை செய்ய நினைப்பவர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட துறையை அல்லது ஒரு பணியை மட்டுமே தேர்ந்தெடுத்துச் செய்வார்கள். ஆனால், ரவிசங்கரும் அவர் சார்ந்திருக்கும் மக்கள் களப்பணி இயக்கமும் மக்களின் தனிப்பட்ட தேவையையும் அவர்கள் எதிர்கொள்ளும் அவசரக்கால உதவிகளையும் சளைக்காமல் செய்து கொடுத்து வருகிறார்கள்.

கிராமப்புறப் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலணி, கிராமப்புறப் பள்ளிகளின் கழிவறைகளைச் சுத்தம் செய்து கொடுப்பது, அரசு மருத்துவமனைகளின் வேண்டு கோளை ஏற்று ஆதரவற்றோரின் சடலங்களை அடக்கம் செய்வது, குடிநோயிலிருந்து மீண்டு வர முன்வருபவர்களை அடுக்கம்பாறை அரசு மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பது, மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் பெண்களை, ‘சி.எஸ்.ஆர் காப்பி’ பெற்று அரசு மனநலக் காப்பகங்களில் சேர்ப்பது என விரிந்து செல்லும் இவர்களது சேவையில் ‘ரத்தசோகை ஒழிப்பு’ முகாம்கள் பெரும் விழிப்புணர்வைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி யிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x