Published : 05 Oct 2023 06:08 AM
Last Updated : 05 Oct 2023 06:08 AM
மீனா வெங்கட்ராமன் ஆசிய சிங்கங்களை ஆராய்ச்சி செய்யும் இந்திய விஞ்ஞானி. சிங்கங்கள், சிங்கங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு குறித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து, பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். மும்பை கானுயிர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு அமைப்பின் (Carnivore Conservation & Research) தலைமை ஆலோசகராக இருக்கிறார். மாணவர்களிடமும் மக்களிடமும் விழிப்புணர்வூட்டும் பணிகளையும் செய்துவருகிறார்.
“சென்னைப் பெண்ணாகிய நான் இங்குள்ள மேற்கு மலைத் தொடர்களை நோக்கிச் செல்லாமல், கிர் காடுகளில் உலவும் சிங்கங்களை ஆராய்ச்சிக்காக ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று பலரும் கேட்பார்கள். எனக்குச் சிங்கத்தைப் பிடிக்கும். இந்த விருப்பமே நாளடைவில் ஆர்வமாக மாறி, கானுயிர் ஆராய்ச்சிப் பயணத்தைத் தொடங்கக் காரணமானது. பிறகு அதுவே வேலையாக மாறி, ஒருகட்டத்தில் என் அடையாளமாகவும் மாறிவிட்டது” என்கிறார் மீனா வெங்கட்ராமன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT