Published : 05 Dec 2016 11:39 AM
Last Updated : 05 Dec 2016 11:39 AM
1830-ம் ஆண்டு முதல் 1886-ம் ஆண்டு வரை வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன், ஒரு அமெரிக்க பெண் கவிஞர். தனிமையைப் பெரிதும் விரும்புதல், வெள்ளை நிற ஆடைகளை மட்டுமே உடுத்துதல் மற்றும் மற்றவர்களுடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல் போன்ற காரணங்களால் விந்தையானவராக அறியப்பட்டார். இவரது கவிதைகள் அக்கால கவிதை மரபுகளை தாண்டிய புதிய வடிவத்துடனும், மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருளாகவும் கொண்டிருந்தன. இவரது கவிதைகளில் வெகு சிலவற்றைத் தவிர மற்ற பெரும்பாலானவை அவரது மரணத்திற்குப் பிறகே வெளிவந்தன. அமெரிக்க கவிஞர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுகிறார்.
# ஒரு மனிதன் என்ன செய்கிறான் என்பதே அவனது நடத்தை. மாறாக, அவன் என்ன நினைக்கிறான், உணர்கிறான் அல்லது நம்புகிறான் என்பதல்ல.
# எதுவுமே சொல்லாமலிருப்பது... சில நேரங்களில் அதிகமானவற்றை சொல்கின்றது.
# தோல்விக்கு எல்லையை முடிவு செய். ஆனால், எல்லையற்ற முயற்சியைக் கொண்டிரு.
# உங்களது மூளையானது இந்த ஆகாயத்தை விட பறந்து விரிந்த ஒன்று.
# மன வலிமையை மேம்படுத்திக்கொள்ள மக்களுக்கு கடினமான தருணங்கள் தேவைப்படுகின்றன.
# எப்பொழுது விடியல் வருமென்று அறியாமல், ஒவ்வொரு கதவாக நான் திறக்கிறேன்.
# தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா.
# அழிவில்லாத மற்றும் என்றென்றும் நிலைத்திருக்கும் விஷயமாக உள்ளது அன்பு.
# அமுதத்தின் சுவையை அறிந்துகொள்ள, வறுமையை அனுபவித்திருக்க வேண்டும்.
# நடந்து முடிந்தவை எல்லாம் ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல.
# ஒருபோதும் மீண்டும் திரும்ப வராத ஒன்றே, வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுகின்றது.
# உண்மையே எனது தேசம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT