Published : 12 Dec 2016 11:38 AM
Last Updated : 12 Dec 2016 11:38 AM

வெற்றி மொழி: ஹிலாரி கிளிண்டன்

1947-ஆம் ஆண்டு பிறந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க அரசியல் பிரபலம். 67வது ஐக்கிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க செனட் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் ஐக்கிய அமெரிக்காவின் நாற்பத்து இரண்டாவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய பில் கிளிண்டனின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்டக்கல்லூரி பட்டத்திற்கு பிறகு வழக்கறிஞராகவும், சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்பட்டார். அமெரிக்க வரலாற்றில், ஒரு பெரிய அரசியல் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வான முதல் பெண்மணி இவரே.



# வாக்களித்தல் என்பது ஒவ்வொரு குடிமகனின் அரும்பெரும் உரிமையாக உள்ளது.

# என்னால் என்ன செய்யப்பட்டது என்பதைப் பொருத்து மக்களால் என்னை மதிப்பிட முடியும்.

# உலகத்தின் சவால்களை எந்த நாடும் தனியாக சமாளிக்க முடியாது.

# குழந்தையின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர் பெற்றோர்களே.

# ஜனநாயகத்துக்கான மாற்றம் நிகழும்போது, போராட்டங்களுக்கு முடிவு என்பதில்லை.

# கடினமான மனிதர்கள் கடினமான முடிவுகளையே தேர்ந்தெடுக் கிறார்கள்.

# நேற்றைய தினம் போன்று வேறு ஒரு தினம் இருக்கப் போவதில்லை.

# மீண்டும் கதவைத் திறந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வழி மன்னிப்பு.

# நியாயமான விளையாட்டிற்கும், விளையாடப்படும் விளையாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது.

# உங்களுக்கு நீங்கள் உண்மையானவராக இருக்க வேண்டியது அவசியம்.

# மனித உரிமைகளே, பெண்களின் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளே மனித உரிமைகள்.

# பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகளானது 21 ஆம் நூற்றாண்டின் முடிவுபெறாத செயல்பாடு என்பதை நான் நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x