Published : 26 Dec 2016 10:25 AM
Last Updated : 26 Dec 2016 10:25 AM

ஹைபிரிட் மாடலில் கவனம் செலுத்தும் டொயோடா

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் இறுகி வரு கின்றன. பிஎஸ் 6 விதிகள் 2020-ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே தன்னை தயார்ப்படுத்தி வருகிறது டொயோடா.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வாகனங்களைத் தயாரிக்கும் அதே சமயம், ஆலையையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பகுதியாக மாற்றும் திட்டத்தையும் டொயோடா மேற்கொண்டுள்ளது.

பெங்களூரிலிருந்து மைசூரு செல்லும் வழியில் பிடாடி தொழிற்பேட்டையில் 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை பசுமை போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தங்கள் ஆலை எத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை உணர்த்த செய்தி யாளர்களுக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது டொயோடா நிர்வாகம். முதல் கட்டமாக ஆலையில் மின்சாரம், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றின் மூலம் எத்தகைய சுற்ற சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என நிறுவனத்தின் ஆற்றல் பிரிவு அதிகாரிகள் விளக்கினர்.

மைசூருக்கு அருகில் இந்த ஆலை அமைந்துள்ளதால் காவிரி நீரில் பெரும்பகுதியை இந்த ஆலை பயன்படுத்திக் கொள்வதாக முதலில் இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை இருந்தது. ஆனால் குடிநீர் தவிர பிற தேவைகள் அனைத்தையும் மழை நீர் சேகரிப்பு மற்றும் மறு சுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்து கொள்கிறது டொயோடா. இதேபோல மின்சார சேமிப்பிலும் ஒவ்வொரு கட்டமாக மாற்றங்களைக் கொண்டு வந்து மின் உபயோகம் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. சூரிய ஆற்றல் மூலம் முற்றிலுமாக மின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் இப்பிரிவு அதிகாரிகள்.

இரண்டு பிரிவுகளாக உள்ள இந்த ஆலையின் மொத்த வாகன உற்பத்தி ஆண்டுக்கு 3 லட்சமாகும். இதில் ஒரு பிரிவில் எடியோஸ், கிராஸ், லிவா உள் ளிட்ட வாகனங்கள் தயாரிக்கப்படு கின்றன. இந்த ஆலையின் உற்பத்தித் திறன் 1.72 லட்சமாகும். இனோவா, கிரெஸ்டா ஆகிய எஸ்யுவி வாகனங் களைத் தயாரிக்கும் மற்றொரு பிரிவின் உற்பத்தித் திறன் 1.25 லட்சமாக உள்ளது. வாகன உற்பத்தி, எதிர்கால திட்டங்கள் குறித்து நிறுவனத்தின் துணைத் தலை வர் டி.எஸ். ஜெய்சங்கருடன் உரையாடி யதிலிருந்து…

கடந்த ஆண்டு டெல்லி மற்றும் என்சிஆர் பிராந்தியத்தில் 2,000 சிசி டீசல் வாகனங்கள் மீதான தடை காரணமாக எஸ்யுவி மாடல்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. இருப்பினும் முந்தைய ஆண்டு விற்பனையான அதே அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிலும் இதே நிலைதான் தொடரும்.

விற்பனை ஒரே சீராக இருந்த போதிலும் லாபம் ஓரளவு அதிகரித்ததற் குக் காரணம் நிறுவனம் மேற்கொண்ட சில சிக்கன நடவடிக்கைகள்தான். எடியோஸ் மாடலில் பெட்ரோல் ரகம் மட்டும் தற்போது தென்னாப்பிரிக் காவுக்கு ஏற்றுமதியாகிறது. டொயோடா நிறுவனத்துடன் டயாட்ஸு இணைந்துள்ளது. இதனால் டயாட்ஸு கார்கள் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து 2017-ம் ஆண்டுக்குப் பிறகுதான் தெரியவரும். ஒருவேளை இந்த ஆலையிலேயே தயாரிக்கவும் முடியும்.

2017-ல் புதிய அறிமுகம் இல்லை யெனினும், ஏற்கெனவே உள்ள மாடல்களில் மேம்படுத்தப்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. பிஎஸ் 6 விதிகளுக்குட்பட்ட கார் தயாரிக்கும் பட்சத்தில் அத்தகைய கார்களின் விலை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை அதிகரிக்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கவனம் அதிகரிக்க அதிகரிக்க பேட்டரி யில் இயங்கும் கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெறும். டொயோடா நிறுவனம் பேட்டரி மற்றும் பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 90 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த காரின் விலை ரூ. 33 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 90 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

பானாசோனிக் நிறுவனம் பேட் டரியை தயாரித்து அளிக்கிறது. உள் நாட்டிலேயே பேட்டரி தயாரிக்கும் நிலை வரும்போது ஹைபிரிட் கார்களின் விலை குறையும். இருப்பினும் இந்தியாவில் ஹைபிரிட் மாடல் கார்களை அதிகம் விற்க கவனம் செலுத்தப் போவதாக ஜெய்சங்கர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x