Published : 26 Dec 2016 10:47 AM
Last Updated : 26 Dec 2016 10:47 AM
1963-ம் ஆண்டு பிறந்த ஜோயல் ஆஸ்டீன் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மதகுருமார், போதகர் மற்றும் எழுத்தாளர். பிரசங்கங்களில் தனது தனிப்பட்ட அணுகுமுறையை உருவாக்கிப் புகழ்பெற்றவர். இவரது தொலைக்காட்சி சொற்பொழிவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக் கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர். ரேடியோ சேனல்களின் மூலம் ஒளிபரப்பப்படும் இவரது போதனைகளும் அதிக பிரசித்தி பெற்றவை. நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்று விற்பனையில் பெரும் சாதனை புரிந்த புத்தகங்கள் இவரது எழுத்தாற்றலுக்கு உதாரணம்.
# சரியான வழியில் நீங்கள் உங்களை விரும்பவில்லை என்றால், உங்களால் உங்களது அண்டை வீட்டுக்காரரிடம் அன்பு செலுத்த முடியாது.
# நம்பிக்கை எளிதானது; மக்கள் அதை சிக்கலாக்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
# நீங்கள் உங்களது வார்த்தைகளை மாற்றுவதன்மூலம், உங்களுக்கான உலகத்தையும் மாற்ற முடியும்.
# பயம் என்பது தொற்றும் தன்மையுடையது என்பதை உண்மையாக நான் நம்புகிறேன்.
# உங்களுக்கு எதிரானவர்கள் போதுமான அளவிற்கு இருக்கிறார்கள்; நீங்கள் உங்களுக்காக இருங்கள்.
# நம்பிக்கை கடவுளை செயல்பட வைக்கின்றது; பயம் எதிரியை செயல்பட வைக்கின்றது.
# நாம் அனைவருக்கும் சில நேரங்களில் இரண்டாவது வாய்ப்பு தேவைப்படுகின்றது.
# ஒருபோதும் நீங்கள் உங்களிடம் குறைகாண முயற்சிக்க வேண்டாம்.
# ஒரு கனவு பொய்த்துப் போய்விட்டால், மற்றொரு கனவை காணுங்கள்.
# உங்கள் கனவுகளை நனவாக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.
# நம்பிக்கையானது நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.
# நீங்கள் எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்களோ, அங்கேயே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT