Published : 26 Dec 2016 11:07 AM
Last Updated : 26 Dec 2016 11:07 AM
பெரிய மால்களும், ஹைப்பர் மார்க்கெட்டுகளும் நகரங் களின் புதிய அடையாளங் களாக மாறி வருகின்றன. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல், ஆடைகள், ஆடம்பர பொருட்களை வரை ஒரே இடத்தில் வாங்கிவிட முடியும். கூடவே திரையரங்கு, உணவகம், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் என பல வசதிகளும் இருப்ப தால் குடும்பத்தோடு செல்வதற்கும் உகந்த இடங்களாக மால்கள் விளங்குகின்றன. இதனால் பெரு நகரங்களைத் தாண்டி இப்போது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களிலும் மால் கலாச்சாரம் வேகமாக உருவாகி வருகிறது.
வழக்கமான சந்தை அனுபவமாக இல்லாமல், முழுவதும் ஏசி வசதி கொண்ட கட்டிடத்துக்குள் பொறுமையாக பார்த்து வாங்க முடிகிறது. பல பிராண்டுகள், பல விற்பனையகங்களுடன், நிறுவனத் தின் நேரடி விற்பனையகங்களும் உள்ளன. இதனால்தான் மக்களின் நுகர்வு ஆர்வம் மால்களை நோக்கி உள்ளது. ஆனால் நவயுக மால்களுக்கு முன்னோடியாக நூற்றாண்டு களுக்கு முன்பே இந்தியாவிலும், உலக அளவிலும் இது போன்ற ஒரே கூரை மால்கள் இருந்துள்ளன.
15 ஆம் நூற்றாண்டிலேயே துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள கிராண்ட் பஸார் மிகப் பெரிய மாலாக இருந்துள்ளது. ஒரே கூரையின் கீழ் அமைந்த 61 தெருக்களில் 3000 கடைகள் உள்ளன. வைர நகைகள், விலை உயர்ந்த ஆடைகள், உலக அளவிலான கைவினை பொருட்கள் உள்ளிட்டவை விற்கப்பட்டுள்ளன. இத்தாலியின் மிலன் நகரில் 1877 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்டர் இரண்டாம் இம்மானுவேல் மால் மிகப் பழமையான மால்களில் ஒன்று. உலக அளவில் மிக புகழ்பெற்ற பிராண்டுகள் இங்கு தங்களது விற்பனையகத்தை வைத்துள்ளன. இப்போதும் பரபரப்பாக இந்த மால் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் இந்த வகையிலான ஒருங்கிணைந்த விற்பனை முறை அறிமுகமாக 200 ஆண்டுகள் ஆகிறது.
இந்தியாவில் மால்களுக்கான வரலாறு நூற்றாண்டை தொட்டுள் ளது. குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள ஹரகோடா கிராமத்தில் அமைந்துள்ள சந்தை தொடங்கப்பட்டு 111 ஆண்டுகள் ஆகிறது.
1905-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் நிறுவனம் இந்த சந்தையை அமைந்துள்ளது. பிரிட்டிஷார் நடத்தி வந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழி லாளர்களுக்காக இதை உருவாக்கி யுள்ளனர். ஒரே கூரையின் கீழ் 8 முதல் 10 கடைகள் வரிசையாக அமைக் கப்பட்டுள்ளன. இங்கு ஆடைகள், காய்கறிகள், வீட்டு மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப் பட்டன. இப்போதும் அந்த கிராமத்தினருக்காக இந்த சந்தை பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த நூற்றாண்டு கண்ட சந்தை கட்டிடம் இதுவரை புதுப்பிக்கப் படவில்லை என்று கிராமத்தினர் கூறியுள்ளனர். இதன் அடிப்படை கட்டுமானம் மாறாமல் அப்படியே புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். ஷாப் பிங் மால்களுக்கு முன்னோடியான இந்த சந்தையை புதுப்பிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT