Published : 14 Nov 2016 10:42 AM
Last Updated : 14 Nov 2016 10:42 AM

வெற்றி மொழி: சார்லி சாப்ளின்

1889-ம் ஆண்டு பிறந்த சார்லி சாப்ளின், உலக புகழ்பெற்ற திரைப்பட கலைஞர். சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என்ற இயற்பெயருடைய இவர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் போன்ற பன்முகத் திறனுடையவர். இளமையில் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த சாப்ளின், ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கினார். ஆஸ்கர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1977-ம் ஆண்டு தனது 88-வது வயதில் மரணமடைந்தார்.

# அருகிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை சோகமானது; ஆனால், தொலைவிலிருந்து பார்க்கும்போது நகைச்சுவையானது.

# கண்ணாடி என்னுடைய சிறந்த நண்பன். ஏனென்றால் நான் அழும்போது அது ஒருபோதும் சிரிப்பதில்லை.

# நீங்கள் கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் உங்களால் ஒருபோதும் வானவில்லை காணமுடியாது.

# எனது உதடுகளுக்கு என்னுடைய பிரச்சினைகள் ஒருபோதும் தெரியாது, அவை எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்.

# மழையில் நனைந்துகொண்டே நடப்பதை நான் எப்போதும் விரும்புகிறேன், நான் அழுவதை யாரும் பார்க்க முடியாதே.

# எனது வலி யாரோ ஒருவருடைய சிரிப்பிற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், எனது சிரிப்பு யாரோ ஒருவருடைய வலிக்கு காரணமாக இருக்கக்கூடாது.

# இந்த பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, நமது துன்பங்களும்தான்.

# நாம் மிக அதிகமாக யோசிக்கிறோம்; மிக குறைவாகவே உணர்கிறோம்.

# வாழ்க்கை அற்புதமானதாக இருக்க முடியும், நீங்கள் அதைப்பற்றி பயப்படவில்லை என்றால்.

# சிரிப்பு இல்லாத நாள், வீணடிக்கப்பட்ட நாள்.

# எளிமை என்பது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல.

# புத்திசாலித்தனத்தை விட அதிகமாக நமக்கு கருணை வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x