Published : 21 Nov 2016 11:46 AM
Last Updated : 21 Nov 2016 11:46 AM
1931 ஆம் ஆண்டு பிறந்த டெஸ்மண்ட் டுட்டு தென்னாப்பிரிக்க சமூக உரிமை ஆர்வலர் மற்றும் ஓய்வுபெற்ற திருச்சபை பேராயர். முதல் கருப்பின பேராயரான இவர், 1980களில் நிறவெறிக்கு எதிரானவராக உலகமெங்கும் அறியப்பட்டார். மனித உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் போன்றவற்றில் பெரும்பங்காற்றி உள்ளார். 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, 2007 ஆம் ஆண்டு காந்தி அமைதி பரிசு உட்பட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பேச்சுகளும் போதனைகளும் பல புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
# நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சிறிதளவு நல்ல செயலை செய்யுங்கள்.
# உங்களுக்கான குடும்பத்தை நீங்கள் தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் அவர்களுக்கு எப்படியோ, அதுபோலவே அவர்களும் உங்களுக்கான கடவுளின் பரிசு.
# மன்னிப்பானது புதிய தொடக்கம் உருவாவதற்கு உங்களால் வழங்கப்பட்ட மற்றொரு வாய்ப்பு.
# நாம் ஒவ்வொருவரும் நன்மை, அன்பு மற்றும் கருணை ஆகியவற்றிற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.
# கடவுள் மட்டுமே சிரிக்க முடியும் ஏனென்றால், கடவுளால் மட்டுமே அடுத்தது என்ன என்பதை உணர முடியும்.
# இறைவனுடைய இல்லத்தில் வெறுப்புக்கு இடம் கிடையாது.
# குழந்தையின் முகத்தை நாம் எப்பொழுது பார்க்கின்றோமோ, அப்போது நாம் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்றோம்.
# மன்னிப்பு என்ற ஒன்று இல்லாமல், எதிர்காலம் என்ற ஒன்று இல்லை.
# ஒவ்வொரு குழந்தைக்கும் மிகச்சிறந்த கல்வியைக் கொடுப்பது நம்முடைய தார்மீக கடமை.
# நீங்கள் அதிகம் வெறுக்கும் நபருடன் பேசும்போது அமைதி கிடைக்கின்றது.
# கடவுளுடைய குடும்பத்தில் வெளியாட்களோ, எதிரிகளோ கிடையாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT