Published : 24 Oct 2016 11:32 AM
Last Updated : 24 Oct 2016 11:32 AM

வெற்றி மொழி: வாரன் பஃபெட்

1930-ஆம் ஆண்டு பிறந்த வாரன் பஃபெட் அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் பிரபல கொடையாளர். பங்குகளின் எதிர்காலத்தை திறம்பட கணிப்பதில் வல்லவரான பஃபெட், மிகவும் வெற்றிகரமான உலக முதலீட்டாளர்களில் ஒருவராகவும், தலைசிறந்த நிதி நிர்வாகியாகவும் கருதப்படுகிறார். 2008-ம் ஆண்டு உலகின் பணக்கார நபராக ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றார். மேலும், 2012-ம் ஆண்டு உலகின் முக்கிய செல்வாக்கு மிகுந்தவராக டைம் பட்டியலில் இடம்பெற்றார். இவரைப்பற்றியும் இவரது முதலீட்டுக் கொள்கைகளைப் பற்றியும் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

# விலை என்பது உங்களால் கொடுக்கப்படுவது. மதிப்பு என்பது உங்களால் பெறப்படுவது

# எதை விவேகமானவர்கள் தொடக்கத்தில் செய்கிறார்களோ, அதை முட்டாள்கள் இறுதியில் செய்கிறார்கள்.

# ஒவ்வொரு துறவிக்கும் ஒரு கடந்தகாலம் உள்ளது. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது.

# யாரோ ஒருவர் இன்று நிழலில் அமர்ந்திருக் கிறார் ஏனெனில் யாரோ ஒருவரால் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு மரம் நடப்பட்டுள்ளது.

# நான் பணக்காரனாக இருக்கப்போகிறேன் என்பது எனக்கு எப்போதும் தெரியும். அதில் ஒரு நிமிடம் கூட எப்போதும் எனக்கு சந்தேகம் இருந்ததில்லை.

# இன்றைய முதலீட்டாள ரால் நேற்றைய வளர்ச்சியிலிருந்து லாபமடைய முடியாது.

# இழக்கக் கூடாது என்பது முதல் விதி. முதல் விதியை மறக்கக் கூடாது என்பது இரண்டாவது விதி.

# நேர்மையானது மிகவும் விலை உயர்ந்த பரிசு, மலிவானவர்களிடம் அதை எதிர்பார்க்காதீர்கள்.

# நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறியாமல் இருப்பதிலிருந்து வருவது இடர்பாடு.

# உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை நீங்கள் வாங்கினால், விரைவில் உங்களுக்கு தேவையான பொருட்களை விற்க நேரிடும்.

# செலவிற்கு பிறகு இருப்பதை சேமிக்காதீர்கள்; மாறாக, சேமிப்பிற்கு பிறகு இருப்பதை செலவிடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x