Published : 03 Oct 2016 12:22 PM
Last Updated : 03 Oct 2016 12:22 PM

டிவிஎஸ் மோட்டார்ஸின் புதிய திட்டம்

தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதல் முறையாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 24 மணி நேரமும் அனைத்து நாள்களிலும் இந்த உதவி நடவடிக்கை தொடரும்.

ஆர்எஸ்ஏ எனப்படும் (Road Side Assistance) இந்தத் திட்டமானது இரு சக்கர வாகனப்பிரிவில் முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கார்களுக்கு சில தயாரிப்பு நிறுவனங்கள் இத்தகைய வசதியை அளிக்கின்றன. ஆனால் இருசக்கர வாகனப் பிரிவில் இந்தத் திட்டம் முதலாவதாகும்.

விற்பனைக்குப் பிந்தைய சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து அளிக்கும் நோக்கில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தச் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது. முதல் கட்டமாக 70 நகரங் களில் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வாகனங்களில் செல்லும்போது ஏற்படும் பழுதை நீக்க 24 மணி நேரமும் இந்த சேவை அளிக்கப்படும். இதற்கு வாகன ஓட்டிகள் ஹெல்ப்லைன் எனப்படும் உதவி மையம் மூலம் உதவியைப் பெறலாம்.

மாற்றுச் சாவி, பெட்ரோல் தீர்ந்து போனால் அதை அளிப்பது, வாகனம் பழுதடைந்தால் அந்த இடத்திலேயே சரி செய்து தருவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் இந்த சேவையில் அடங்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறுமின்றி தங்களது பயணத்தைத் தொடர முடியும். இந்தியாவில் 2.8 கோடி டிவிஎஸ் வாகன உரிமையாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.

நிறுவனத்துக்குள்ள 3,500 டீலர் ஒருங்கிணைப்பு மூலம் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜேஎஸ். ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

புதிதாக டிவிஎஸ் வாகனங்களை வாங்குவோர் மட்டுமின்றி ஏற்கெனவே இத்தகயை வாகனங்களை வைத்திருப் போரும் பெறலாம். இந்தியா முழுவதும் இத்திட்டம் மார்ச் மாதத்திற்குள் செயல் பாட்டுக்கு வரும். வாடிக்கையாளர்கள் 1800 419 2077 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ அல்லது TVSM Service App மூலம் ஆர்எஸ்ஏ சேவையைப் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x