Published : 03 Oct 2016 12:22 PM
Last Updated : 03 Oct 2016 12:22 PM
ஒரு விதையின் அடிப்படை பண்புகளை மாற்றாமல், அதன் மூலக்கூறுகளில் சில மாற்றங்களைச் செய்து அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதே மரபணு மாற்ற தொழில்நுட்பம். பாரம்பரிய சாகுபடி முறையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்பதால் இந்த உயிரி தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியும் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
குறுகிய காலத்தில் மகசூல், அதிக மகசூல், பூச்சி தாக்குதல் எதிர்ப்பு சக்தி என விவசாய தொழிலில் தொழில்நுட்பமாக பார்க்கப்பட்ட, இந்த மரபணு மாற்ற விதைகள் முயற்சி ஒருசில நிறுவனங்களின் நன்மைக்கே என்கிற சர்ச்சையும் இருந்து வருகிறது.
சில குறிப்பிட்ட சர்வதேச நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளை உருவாக்கி அதை உலக நாடுகளில் சந்தைப்படுத்தியுள்ளன. இந்த விதைகளை அந்த குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே வாங்கமுடியும். இதற்கான உரிமத்தொகையையும் சம்பந்தபட்ட நாடுகள் வழங்க வேண்டும்.
உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டம் என்று கூறப்பட்டாலும், இந்த விதைகள் மறுமுளைப்புத்திறன் இல்லை என்பதும், உடலுக்கு தீங்கை விளைவிக்க கூடியவை என்கிற சர்ச்சைகளும் உள்ளன.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சாகுபடி பரப்பளவு
1996 - 1.7 மில்லியன் ஹெக்டர்
2014 - 18.15 கோடி ஹெக்டர்
பி.டி.காட்டன்
முதன்முதல் பி.டி. கத்தரிக்காயை பயிரிட்ட நாடு வங்கதேசம்
பி.டி. காட்டன் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு 2002
இப்போது நாம் பயன்படுத்தும் ஆடை வகைகளில் மரபணு மாற்றப்பட்ட பி.டி.காட்டன் பருத்தி வகைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மேக்யோ என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மான்சாண்டோ விதையை விநியோகம் செய்கிறது.
இந்தியாவில் பயிரிடப்படும் பருத்தி வகைகளில் பி.டி.பருத்தி பயிர்களின் அளவு.
பேசிலஸ் துரின்ஜினீஸ் என்ற பாக்டீரியாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பருத்தி விதை. அதிக மகசூல் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மைக்காக இந்த மரபணு மாற்ற விதையை மான்சாண்டோ நிறுவனம் கண்டுபிடித்தது.
800 ரூ- இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட 450 கிராம் பருத்தி விதையின் விலை.
2007-ம் ஆண்டு பி.டி. கத்தரிக்காய் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தார்வேர்டு பல்கலைக்கழகம் மேக்யோ நிறுவனத்துடன் இணைந்து இதைக் கண்டுபிடித்தது.
2010-ம் ஆண்டு பி.டி. கத்தரிக்காய்க்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது.
முன்னணி நிறுவனங்கள் மதிப்பு (கோடி டாலர்)
மான்சாண்டோ 469
டியூபாண்ட் 330
லேண்ட் ஓ லேக்ஸ் 91
சின்ஜென்டா 201
கேடபிள்யூ ஏஜி 70
குரூப் லிமகிரைன் 122
பேயர் கிராப் சயின்ஸ் 50
உலகிலேயே முதன் முதலில் மரபணு மாற்றப்பட்ட பயிர் புகையிலைச் செடி.
1982-ம் ஆண்டில் இதில் மரபணு மாற்ற தொழில்நுட்பம் புகுத்தபட்டது.
1995-ம் ஆண்டில் தக்காளியில் மரபணு மாற்ற தொழில்நுட்பம் கொண்டுவரப்பட்டது.
சீனாவில் மரபணு மாற்றப்பட்ட பப்பாளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
வளரும் நாடுகளே மரபணு மாற்ற பயிர்களை அதிகமாக பயிரிட்டு வருகின்றன.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை சாகுபடி செய்யாத மாநிலம் சிக்கிம்
அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிர்கள்
சோயா பீன்ஸ் 50 %
சோளம் 30 %
பருத்தி 14 %
கனோலா 9%
மற்றவை 1%
1.80 கோடி மக்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பயன்பெறுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
1500 கோடியை பி.டி. பருத்தி விதைக்கு மான்சாண்டோ நிறுவனத்திற்கு 2002-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை உரிமத் தொகையாக இந்தியா செலுத்தியுள்ளது.
இந்தியாவின் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் பயிர்களைக் கண்காணிப்பது மற்றும் அனுமதி வழங்கும் அமைப்பு மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு (ஜிஇஏசி).
28 நாடுகள், சர்வதேச அளவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துகின்றன.
கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT