Published : 02 May 2016 12:32 PM
Last Updated : 02 May 2016 12:32 PM
ஏதோ டப்பிங் பட தலைப்பு என்று நினைக்க வேண்டாம். சற்று நிதானமாக யோசித்தீர்களானால் நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பரோ ரூ. 251-க்கு ஸ்மார்ட்போன் வாங்க முன் பதிவு செய்திருந்த விஷயத்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது நீங்களும் ஆசைப்பட்டு முன் பதிவு செய்து அல்லது பணத்தை திரும்பப் பெற்றிருப்பீர்கள்.
ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 251-க்கு ஸ்மார்ட்போன் விற்கப் போவதாக அறிவித்தவுடன் அந்நிறுவன இணையதளத்தில் முன் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். பணத்தைச் செலுத்தி முன் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நிறுவனம் எதிர்பார்த்ததைவிட மிக மிக அதிகம். ஆனால் இவ்வளவு பேருக்கு குறைந்த விலையில் உடனடியாக சப்ளை செய்ய முடியாது என்பதால் பணத்தைத் திருப்பிச் செலுத்த முன் வந்தது ரிங்கிங் பெல்ஸ்.
இனிமேல் தங்களது செல்போனை டெலிவரி செய்த (சிஓடி) பிறகு பணம் செலுத்தினால் போதும் என்ற முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளது.
நான்கு அங்குல தொடு திரை, 3.2 மெகாபிக்சல் கேமிரா, 0.3 முன்புற கேமிரா, 1.3 கிகா ஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 8 ஜிபி உள்ளக நினைவுத் திறன் தேவைப்பட்டால் 32 ஜிபி வரை நினைவகத்திறனை மேம்படுத்தும் வசதி, 1450 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு லாலி பாப் 5.1 ஆகிய வசதிகளோடு இந்தியா முழுவதும் 650-க்கும் அதிகமான விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களோடு தங்கள் தயாரிப்பு சந்தைக்கு வர உள்ளதாக நிறுவனம் அறிவித்தது. ஆனால் இன்னமும் வந்தபாடில்லை.
டாகோஸ் எக்ஸ் 1
ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாகோஸ் மல்டி மீடியா நிறுவனம் ரூ. 888 விலை யில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மே 2-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவித் துள்ளது. 4 அங்குல திரை, 1 ஜிபி ராம், 2 மெகா பிக்ஸெல் கேமிரா, 4 ஜிபி உள் நினைவகம், 32 ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் வசதி, 1,300 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4, 1.3 ஜிகாஹெர்ட்ஸ், கோர்டெக்ஸ் ஏ7 டியூயல் பிராசஸர் மற்றும் 2 சிம்கார்டு வசதியோடு இது வர உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் முன்னதாகவே வெகு எச்சரிக்கையாக முன் பதிவு செய்பவர்கள் பொருளைப் பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தினால் போதும் (சிஓடி) என அறிவித்துள்ளது.
சாத்தியமா?
ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைந்து வருவது உண்மைதான். ஆனால் இவ்வளவு விலை குறைவாக ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்க முடியாது என்கின்றனர் இத்துறை வல்லுநர்கள்.
டாகோஸ் நிறுவனம் அறிவித்துள்ள 800X480 டிஸ்பிளே மற்றும் 4 ஜிபி உள் நினைவகம், விஜிஏ கேமிரா ஆகியன இப்போது வழக்கத்தில் இல்லாத தொழில்நுட்பமாகும். இதனால் மேம்பட்ட செயல்திறனை அளிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் மாறிவரும் தொழில்நுட்ப மாறுதல் களை உள்வாங்கி செயல்படும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்ற மலிவு விலை ஸ்மார்ட் போன்கள் எவ்வித மாற்றத்தையும் உள்வாங்காது. இதனால் எதையும் அப்டேட் செய்யவே முடியாது.
விலை குறைந்த ஸ்மார்ட்போன் களுக்கு விற்பனைக்கு பிந்தைய சிறப் பான சேவையை எப்படி எதிர்பார்க்க முடியும். ரூ. 251 விலையிலான ஸ்மார்ட்போனுக்கு ரூ. 200 ரிப்பேர் செலவு செய்ய எவர்தான் முன் வருவர்.
ஸ்மார்ட்போன் என்றால் அதற் கென்று சில சிறப்பம்சங்கள் உண்டு. அவை கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு ஓரளவு செலவிட வேண்டும். ஸ்மார்ட்போனை ரிப்பேர் செய்யவே குறைந்தபட்சம் ரூ. 250 கட்டணம் கேட் கும் சூழலில் ரூ. 251-க்கு புதிய ஸ்மார்ட்போன் எப்படி சாத்தியமாகும் என்பதை நினைத்தாலே போதும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT