Published : 18 Apr 2016 10:43 AM
Last Updated : 18 Apr 2016 10:43 AM
வாகனங்களின் முகப்புக் கண்ணாடி மிகவும் முக்கியமானது. இதைப் பாதுகாத்து பராமரிக்க எளிய வழிகள்:
பகலில் வாகனம் ஓட்டுவதைக் காட்டிலும் இரவில் வாகனம் ஓட்டும் போது முகப்பு கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். எதிரில் வரும் வாகனத்தைத் தெளிவாகப் பார்க்க கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
காரின் கண்ணாடிகளைத் துடைக்க சுத்தமான காட்டன் துணியைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் கண்ணாடியில் கீறல் விழுவதைத் தவிர்க்க முடியும்.
வைப்பர் பிளேடு மோசமான நிலையில் இருப்பதை உணர்ந்தால் உடனே மாற்றி விடுவது நல்லது. இல்லையெனில் வைப்பர் பிளேடு கண்ணாடியில் கீறலை ஏற்படுத்தலாம். கீறல் விழுந்த முகப்பு கண்ணாடியுடன் இரவில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது.
தேவையற்ற ஸ்டிக்கர்களை கண்ணாடியில் இருந்து அகற்றி விடுவது மிகவும் நல்லது. நாள்பட்ட ஸ்டிக்கர்களை கண்ணாடியில் இருந்து அகற்றும் போது கீறல்கள் விழ வாய்ப்பு உள்ளன.
டி ஃபாகர் (DE FOGGER) இருக்கும் கார்களில், கண்ணாடியின் மீது ஆவி படர்ந்திருக்கும்போது மட்டும் ஸ்விட்ச் ஆன் செய்து பனி மறைந்தவுடன் அதை அணைத்து விடுவது நல்லது. இதை அதிக நேரம் ஆன் செய்து வைத்திருந்தால் வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெயிலில் அதிக நேரம் வாகனத்தை நிறுத்தி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், கார் கதவில் இருக்கும் கண்ணாடிகளை முழுவதுமாக மூடி வைக்காமல் ஏதாவது ஒரு கதவின் கண்ணாடியை கொஞ்சம் திறந்த நிலையில் வைப்பது நல்லது. கண்ணாடிகள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் போது காற்று புக வாய்ப்பு இல்லாமல் உள்ளே வெப்பம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தகவல் உதவி
கே.ஸ்ரீனிவாசன்,
உதவி துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.
வாசகர்கள் வாகன பராமரிப்பு தொடர்பான சந்தேகங்களை இ-மெயில் அல்லது கடிதம் மூலம் கேட்டால் அதற்கு இதே பகுதியில் பதில் அளிக்கப்படும்.
மின்னஞ்சல்: vanigaveedhi@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT