Published : 25 Apr 2016 10:51 AM
Last Updated : 25 Apr 2016 10:51 AM
கார் ஓடும் போது எழும் சப்தம், ஹாரன் சப்தம் இவையெல்லாம் நமக்குப் பரிச்சயமானவை. ஆனால் காரின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உருவாகும் மெல்லிய ஒலியை இசையாக உருவாக்க முடியும் என நிரூபித்துள்ளது ஹூண்டாய்.
காரின் வைபர்கள் எழுப்பும் ஓசை, ஹேண்ட் பிரேக் போடும்போது எழும் சத்தம், இன்டிகேட்டர் போடும்போது எழும் மெல்லிய ஒலி, இருக்கை பெல்ட்டை இழுத்து போடும்போது எழும் சப்தம், கார் கதவை திறந்து மூடும்போது எழும் ஓசை, ஜன்னல் கதவுகளைத் திறக்கும் போது ஏற்படும் மெல்லிய சப்தம் இவைதான் இந்த ஆல்பத்தின் பின்னணி இசை. மொத்தம் 118 வகையான ஓசைகள் பின்னணியில் இந்த ஆல்பத்தை அமைத்துள்ளனர். இதை வடிவமைத்த பெருமை பிரபல இசையமைப்பாளர் கிளின்டன் செரிஜோவையே சாரும். இளைஞர்களின் இசை நாயகன் அரிஜித் சிங்கின் பின்னணி குரல் இந்த ஆல்பத்துக்கு மேலும் மெருகேற்றியுள்ளது. ‘’டிரைவ் மே ஜூனோன்’’ என இதற்குப் பெயரிட்டுள்ளனர்.
யூ டியூப் மற்றும் ஹூண்டாய் நிறுவன இணையதளத்தில் இந்த இசை ஆல்பம் வெளியாகியுள்ளது. வெளியான 5 நாளில் மொத்தம் 70 லட்சம் பேர் இதைப் பார்த்து ரசித்து தங்களது விருப்ப பாடல் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளனர். அவர்களில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானும் ஒருவர்.
இதுவரை கேட்கவில்லையெனில் கேட்டு மகிழுங்கள்.
இணையதள முகவரி: >https://www.youtube.com/watch?v=_Xdd3J2KQmk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT