Published : 18 Mar 2016 06:28 PM
Last Updated : 18 Mar 2016 06:28 PM

முக்கியத்துவம் பெறுகிறதா மியூச்சுவல் பண்ட் துறை?

சமீபத்திய சில வருடங்களாக அதிகம் கவனிக்கப்படும் துறையாக இந்திய மியூச்சுவல் பண்ட் துறை இருக்கிறது. எதாவது ஒருவகையில் இந்தத் துறையைப் பற்றிய செய்தி வந்துகொண்டே இருக்கிறது. சமீபத்திய முக்கிய செய்தி அதிக தொகையை கையாளும் நிறுவனங்களின் பட்டிய லில் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் முதலிடத்தை பிடித்ததுதான். இதுவரை முதலிடத்தில் இருந்த ஹெச்டிஎப்சி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

பிப்ரவரி மாத இறுதியில் ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் கையாளும் தொகை 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஹெச்டிஎப்சி 1.70 லட்சம் கோடி ரூபாயை கையாளுகிறது. கடந்த சில வருடங்களாக முதல் இடத்தில் இருந்த ஹெச்டிஎப்சி இப்போது இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளது. இந்த துறையில் உள்ள 43 நிறுவனங்களும் கையாளும் மொத்த தொகை ரூ.12.63 லட்சம் கோடி. மொத்தம் இவ்வளவு தொகையை கையாளுகின்றவா என்ற சந்தேகம் வருவது இயல்புதான். ஆனால் இந்த துறை இப்போதுதான் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை.

ஆனால் இந்த மொத்த தொகையும் எல்.ஐ.சி. கையாளும் தொகையை விட குறைவுதான். தவிர வங்கியில் உள்ள மொத்த டெபாசிட் தொகை 93 லட்சம் கோடி ரூபாய். இதனுடன் ஒப்பிடும் போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்துகளின் மதிப்பு மிகவும் குறைவு. இந்தியாவில் ஒரு சதவீத மக்களுக்கு கூட இன்னும் மியூச்சுவல் பண்ட் சென்றடையவில்லை.

பல கட்ட வளர்ச்சி

உலகம் முழுக்க பல வருடங்களாக மியூச்சுவல் பண்ட்கள் இருந்தாலும் இந்தியாவில் 1963-ம் ஆண்டுதான் யுடிஐ தொடங்கப்பட்டது. 1987-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் மட்டுமே மியூச்சு வல் பண்ட் துறையில் செயல்பட்டு வந்தது. 1987-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் நிறு வனங்கள் தொடங்க அனுமதிக்கப் பட்டன.

1991-ம் ஆண்டு மன்மோகன் சிங் அறிவித்த பட்ஜெட்டில் தனியார் நிறு வனங்களும் மியூச்சுவல் பண்ட் தொடங்க அனுமதிக்கப்பட்டன. அதன் பிறகுதான் பல தனியார் நிறுவனங் களும், வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களைத் தொடங்கின. அதன் பிறகு இந்த துறை அசுர வளர்ச்சி அடைந்தது. கடந்த மார்ச் மாதம் 2.3 லட்சம் கோடி ரூபாயை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாண்டன. இப்போது ரூ.12 லட்சம் கோடிக்கு மேல்.

2018-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் தொகை 20 லட்சம் கோடியாக உயரும் என்று ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சந்திப் சிக்கா தெரிவித்திருக்கிறார்.

பல நிறுவனங்கள் இருந்தாலும் இப்போது மியூச்சுவல் பண்ட் துறையில் நிறுவனங்கள் இணைவது நடந்து வரு கிறது. குறிப்பாக வெளிநாட்டு மியூச்சு வல் பண்ட் நிறுவனங்கள் இந்தியா வில் செயல்பட முடியாமல் விற்றுவரு கின்றன. ஐஎன்ஜி, பைன்பிரிட்ஜ், மார்கன் ஸ்டான்லி சில நிறுவனங்கள் இங்கு செயல்பட முடியாமல் இந்திய நிறுவனங்களிடம் விற்றுவிட்டன. தற்போது ஜேபி மார்கன் நிறுவனத்தை டாடா மியூச்சுவல் பண்ட் வாங்குவதாக சந்தையில் செய்தி உலா வருகின்றன.

அதேபோல யெஸ் வங்கி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தொடங்க அனுமதி வாங்கி வைத்துள் ளன. யெஸ் வங்கி தற்போது இருக்கும் எதாவது ஒரு நிறுவனத்தை கையகப் படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக அந்நிய முதலீட்டாளர்கள் இருந்தார்கள். அந்த பட்டியலில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் இணைந்துவிட்டன. உதாரணத்துக்கு கடந்த வருடம் அந்நிய முதலீட்டாளர்கள் 300 கோடி டாலர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர். ஆனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் 1,000 கோடி டாலர் முதலீடு செய்திருக்கின்றன. இந்த நிலை நடப்பாண்டிலும் தொடரும் என்று குவாண்டம் நிறுவனத்தின் சி.இ.ஓ. தெரிவித்திருக்கிறார்.

தவிர, தற்போதைய இளைஞர்கள் வழக்கமான டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை விட நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது உயர்ந்திருக்கிறது. தவிர ஆன்லைன் மூலம் மியூச்சுவல் பண்ட் வாங்க முடிவது எளிதாக இருப்பது, இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பது ஆகிய காரணங்களால் இந்த துறையின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது இந்த துறை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x