Published : 07 Mar 2016 11:05 AM
Last Updated : 07 Mar 2016 11:05 AM

துருப்பிடிக்காத கார்கள் சாத்தியமா?

கார் வைத்திருப்பவர்கள் பலருக்கும் தெரியும், ஒவ்வொரு முறை சர்வீசுக்கு விடும்போதும், காரின் அடிப்பகுதியில் ரப்பர் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பர். இவை எல்லாமே ஓரளவு தீர்வு தருமே தவிர நிரந்தர தீர்வாக இருக்கவில்லை.

கடலோரப் பகுதியில் உப்புக் காற்று வீசும் பகுதியில் உள்ள கார்கள் விரைவிலேயே துருப்பிடிக்க ஆரம் பித்துவிடுகின்றன. ஆனால் வெளி நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 12 ஆண்டு வரை துருப்பிடிக் காமலிருக்க உத்தரவாதம் அளிக்கப் படுகின்றன. இந்தியாவில் செயல்படும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு இதே உத்தர வாதம் அளிக்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள கார்களுக்கு அவை அளிக்கப் படுவதில்லை.

இதற்கு என்னதான் காரணம்?

மும்பை ஐஐடி-யுடன் இணைந்து சர்வதேச ஜிங்க் நிறுவனமும் ஹிந்துஸ் தான் ஜிங்க் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில் பல தகவல்கள் வெளிவந் துள்ளன. வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் இரும்புத் தகடுகளுக்குப் பதில் இரும் புத் தகடுகளில் துத்தநாக மேற் பூச்சு (கேல்வனைஸ்டு ஸ்டீல்) பயன் படுத்துவது தெரியவந்தது. வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களுக்கு 12 ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளிக்கின்றன.

இதேபோல இங்குள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளி நாடுகளுக்கு ஏற்று மதி செய்யும் கார்களுக்கு மட்டும் இத்தகைய கேல்வனைஸ்டு ஸ்டீலைப் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இங்குள்ள வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் சில மாடல்களில் இத்தகைய தொழில்நுட்பம் (கேல்வனைஸ்டு ஸ்டீல் உபயோகம்) கொண்ட கார்களை விற்பனை செய் வதும் ஆய்வில் தெரியவந்தது.

உலகிலேயே அதிகமான கார் களை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. கேல்வனைஸ்டு ஸ்டீல் உபயோகிப்பதன் மூலம் இரும்புத் தகடுகளின் எடை குறையும். இதனால் கார்களின் செயல் திறன் மேம்படும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீத அளவுக்கு துருப்பிடிப்பதால் இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சாதாரண ஸ்டீல் மூலம் தயாரிக்கப் படும் கார் வைத்திருக்கும் உரிமையாளர் கார் வாங்கும் போது டெஃப்லான் கோட்டிங் என்பதற்காக ரூ.7 ஆயிரமும், அடுத்த ஆறு ஆண்டுகளில் துருப்பிடிக்காமலிருப்பதற்காக அதிக பட்சம் ரூ. 20 ஆயிரம் வரை செலவிடு கிறார். அதே கேல்வனைஸ்டு ஸ்டீல் காராக இருந்தால் கூடுதலாக அவர் ஒரே சமயத்தில் செலவிடும் தொகை ரூ. 9 ஆயிரம் ஆறு ஆண்டுக்குப் பிறகு ஆயிரம் ரூபாயும் ஆக மொத்தம் 10 ஆயிரம் செலவிட்டால் போதும்.

கார்களின் பாதுகாப்பு எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளப் படுவதில்லை. இதனால் இதை பயன் படுத்த இந்திய தரச்சான்று மையம் (பிஐஎஸ்) முன்வர வேண்டும் என மும்பை ஐஐடி-யின் ஆய்வில் குறிப் பிடப்பட்டுள்ளது. அத்துடன் கேல் வனைஸ்டு ஸ்டீல் உபயோகத்தை கட்டாயமாக்கினால் மட்டுமே ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதைப் பின்பற்றும் என குறிப்பிட்டுள்ளது.

கேல்வனைஸ்டு ஸ்டீல் உபயோகம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தால் மட்டுமே இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கும் துருப்பிடிக்காத கார்களை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும்.

கேல்வனைஸ்டு ஸ்டீல் எப்படி தயாராகிறது?

இரும்புத் தகடுகளை அதன் உயர்ந்தபட்ச வெப்பத்தில் திரவ துத்தநாகத்தில் மூழ்கடித்து எடுக்கப்படுவதே கேல்வனைஸ்டு ஸ்டீல் எனப்படுகிறது. இது இரும்பின் மீது மேல்பூச்சாக இருப்பதால் துருப்பிடிக்காத தன்மை கொண்டதாக விளங்குகிறது.

இரும்புத் தகட்டின் மீது மேற்பூச்சு பூசப்படுதவதால் இரும்பின் இயல்பு குணம் எதுவும் மாறாது. அதாவது உறுதித் தன்மை, காந்தத்தால் கவரப்படும் தன்மை என எதுவுமே மாறாது.

விழிப்புணர்வு ஏற்படுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x