Published : 01 Feb 2016 11:02 AM
Last Updated : 01 Feb 2016 11:02 AM
கேட்டரிங் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பிக்கையோடு நல்ல பெயரையும் சம்பாதித்து வைத்துள்ள குடும்பம், அந்த தொழிலில் அனைத்து வேலைகளும் அத்துபடி என்பதால், எனக்கு அந்த தொழிலில் வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் எனது மனது அதை சிந்திக்காமல், புதிய ஒன்றை எனக்கான தொழிலாக உருவாக்க வேண்டும் என யோசித்தது. பொதுவாக திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் மேடையை மலர்களால் அலங்கரிப்பது பத்தோடு பதினோறாவது வேலையாகப் பார்ப் பார்கள். இதையே ஏன் தனி தொழிலாக எடுத்துச் செய்யக்கூடாது என யோசித்து, அதற்காக இரண்டு ஆண்டுகள் அந்த துறையை கவனித்து, கற்றுக் கொண்டு இறங்கினேன்.
ஆனால் இந்த தொழிலை செய்யத் தொடங்குவதற்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் ஐடி மேனேஜ்மெண்ட் படிப்பும், அங்கேயே வேலையும் பார்த்துக் கொண்டிருந்தேன். தனியாக அங்கிருப்பது ஏதோ ஒன்றை இழந்தது போலவே இருந்தது. தவறு செய்தால் கண்டிக்கவும், சரியாக செய்தால் பாராட்டவும் வாய்ப்பில்லாத ஒரு சூழலில் என்னால் இருக்க முடியவில்லை. இதனால் திரும்பவும் சென்னைக்கே வந்து வேறு வாய்ப்புகளைத் தேடினேன்.
இதற்கிடையே பண்பலை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இருந்தது. ஆனால் இதை நிரந்தர தொழிலாக மாற்றிக்கொள்ளும் சூழல் இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில்தான் மலர்கள் அலங்கார துறை பக்கம் கவனம் சென்றது. இதை தனியாக எடுத்து செய்வதன் மூலம் வருமானத்தையும், அடையாளத்தையும் பெற முடியும் என நம்பிக்கை வந்தது. இதற்கு எனது மேலாண்மை கல்வியும், ஆஸ்திரேலிய பணி அனுபவமும் காரணமாக இருந்தது. ஆனால் இந்த துறை குறித்து சுத்தமான எனக்கு எதுவும் தெரியாது என்கிறபோதுதான் இந்த நம்பிக்கை வந்தது ஆச்சர்யமானது.
இதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் களப்பணி (பீல்ட் ஒர்க்) மேற்கொண்டேன். நிகழ்ச்சிகளுக்குச் சென்று மலர் அலங்காரங்களை எப்படி வடிவமைக்கிறார்கள், எத்தனை பேர் வேலை செய்கிறார்கள், மலர்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதை வேடிக்கை பார்ப்பேன். கூடவே மலர்களை எங்கிருந்து வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, விற்பனையாளர்கள் விவசாயிகளைத் தேடி சென்று மலர்களைக் கையாளும் முறைகளைத் தெரிந்து கொண்டேன். தொழிலில் இறங்கலாம் என நம்பிக்கை வந்தவுடன் எனது அப்பாவிடமே முதல் வாய்ப்பு கேட்டேன்.
ஒரு வாய்ப்பை மட்டும் உருவாக்கித் தாருங்கள், எனது வேலைகளைப் பார்த்து நம்பிக்கை ஏற்பட்ட பிறகு உங்களது வாடிக்கையாளர்களுக்குச் குறிப்பிடுங்கள் எனக் கேட்டேன். அவர் முத லில் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத் தியதில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தன. அடுத்த இரண்டு ஆண்டுகள் பெங்களூர், ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் என பூ விவசாயிகள், சந்தைகள் என அலைந்து கொள்முதல் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டேன்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆர்கிட், டுலிப் என மலர்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து கொடுக்கும் அளவுக்கு தொழிலில் அடையாளத்தை உருவாக்கினேன். தற்போது நான் தனியாக செய்வது தவிர, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் (ஈவண்ட் மேனேஜ்மெண்ட்) நிறுவனங்களே எங்களிடம் ஆர்டர் கொடுக்கின்றன. பூ ஷாப் என தனியாக விற்பனையகத்தையும் தொடங்கி நடத்தி வருகிறேன். எனது முயற்சிகளுக்கு எனது மனைவி பக்கபலமாக இருந்து வருகிறார். தேவைக்கு ஏற்ப பத்து முதல் 20 பேர் வரை வேலை அளித்து வருவதோடு, நிரந்தரமாக நான்கு பேருக்கு தொடர்ச்சியாகவும் வேலை அளித்து வருகிறேன்.
மலர்களைக் கையாளுவது எளிமையான தல்ல, கொஞ்சம் கவனக்குறைவாகக் கையாண்டாலோ, ஒருநாள் தாமதமானாலோ மொத்தமும் நஷ்டமாகி விடும். அதுபோல வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடுதான் அணுகுவார்கள், நமது திட்டமிடலில் மாற்றம் இருந்தால் அவர்களிடம் விளக்கி மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அதுதான் நமது பெயரைக் காப்பாற்றும் என நம்புகிறேன். பொதுவாக ஒரு தொழில் முனைவோராக நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் எந்த தொழிலாக இருந்தாலும் நாம் நேரடியாக களத்தில் இறங்கி நடத்த வேண்டும். அதுதான் வெற்றியை தேடிதரும். உண்மைதான் கள நிலவரங்களை அறிந்தவர்களே சிறப்பான
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT