Published : 01 Feb 2016 10:19 AM
Last Updated : 01 Feb 2016 10:19 AM
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெல்லியில் நடத்தப்படும் ஆட்டோ மொபைல் கண்காட்சி (ஆட்டோ எக்ஸ்போ) இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங் களை மட்டுமின்றி சர்வதேச நிறுவனங் களையும் அதிக அளவில் கவர்ந்து வருகிறது.
1985-ம் ஆண்டு இதுபோன்ற கண்காட்சி களை நடத்த வேண்டும் என்ற கருத்துரு உருவாகி அது 1986-ம் ஆண்டில் செயல் படுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இக்கண்காட்சி ஆசிய அளவில் மிகப் பெரிய கண்காட்சி யாகும். உலக அளவில் இரண்டாவது பெரிய கண்காட்சியாக இது கருதப்படுகிறது.
ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியாளர்கள் (ஏசிஎம்ஏ), இந்தியத் தொழிலகக் கூட்ட மைப்பு (சிஐஐ)) மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) ஆகிய மூன்றும் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. 13-வது கண்காட்சி பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ கிரேட்டர் நொய்டாவிலும், உதிரிபாகங்கள் கண்காட்சி பிரகதி மைதானத்திலும் நடைபெற உள்ளது.
இந்தியா மட்டுமின்றி 25 நாடுகளைச் சேர்ந்த 1,500 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இங்கு காட்சிப்படுத்து கின்றன. 1.15 லட்சம் சதுர மீட்டர் பரப் பளவில் நடைபெற உள்ள இக்கண் காட்சியை 7 லட்சம் பேர் பார்வையிடுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள கண்காட்சியில் பல புதிய வரவுகள் இடம்பெறுவது நிச்சயம். இது தொடர்பான அறிவிப்புகளை பல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்து விட்டன. ஜாகுவார் எக்ஸ்இ செடான் கார் இக்கண்காட்சியில் அனைவரது எதிர்பார்ப்பையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனமும் தன் பங்கிற்கு ஒய்பிஏ காம்பாக்ட் எஸ்யுவி ரக மாடலை காட்சிப்படுத்தும் எனத் தெரிகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேட்டரி காரை இங்கு காட்சிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்க்கத் திட்ட மிட்டுள்ளது மஹிந்திரா. பெங்க ளூரைச் சேர்ந்த மொய்னி சகோத ரர்களின் ரேவா ஆலையை கையகப் படுத்தியபிறகு மஹிந்திரா நிறுவனத் தின் தயாரிப்பாக பேட்டரி கார் இக்கண் காட்சியில் இடம்பெறுகிறது. பிற நிறு வனங்களும் இதுபோன்ற பேட்டரி காரை காட்சிப்படுத்த உள்ளன.
டாடா நிறுவனமும் தனது நெக்ஸான் ரக எஸ்யுவியை இங்கு காட்சிப்படுத்தத் திட்ட மிட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கைகோர்த்து புதிய மோட்டார் சைக் கிளை காட்சிப்படுத்த உள்ளது. ஆட்டோ மொபைல் துறையைச் சேர்ந்த இன்ஜின், கியர்பாக்ஸ், எக்ஸாஸ்ட், ஆக்ஸில், ஸ்டீரிங், பிரேக், சஸ்பென்ஷன், எலெக்ட் ரிக் மற்றும் எலெக்ட்ரானிக், டயர், சக்கரம் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன.
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பரா மரிப்பு மற்றும் அதற்கு உதவும் உபகரணங் களும் இக்கண்காட்சியில் இடம்பெறும். அத்துடன் ஆட்டோ மொபைல் துறை யில் பயன்படுத்தப்படும் பெயின்ட், லூப் ரிகண்ட், ஒட்டும் பொருள் உள்ளிட்ட வற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை இங்கு காட்சிப் படுத்துகின்றன.
பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்
பிஎம்டபிள்யூ நிறுவனம் 2014-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் டிராகன் எக்ஸ் 21 ரக மாடலை மோட்டார் சைக்கிளை காட்சிப்படுத்தியது. இப்போது டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந் துள்ளதால் எத்தகைய தயாரிப்பு இக்கண்காட்சியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இக்கண் காட்சியில் ஜி 310 ஆர் மாடல் மோட்டார் சைக்கிள் இடம்பெறும் என்று தெரிகிறது. 331 சிசி திறனுடன் ஒற்றை சிலிண்டர் கொண்ட திரவ குளிர்விப்பு இன்ஜினை கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது 34 பிஹெச்பி செயல்திறனுடன் 28 நியூட்டன் மீட்டர் 7,500 ஆர்பிஎம் செயல்திறன் கொண்டதாக இருக்கும். குறைந்த விலையில் இதை அளிக்க வேண்டும் என்பதற்காக டிவிஎஸ் நிறுவனத் தின் ஓசூர் ஆலையில் தயாரிக்கப்படுகிறது.
யமஹா எம்டி 03
இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள யமஹா நிறுவனம் டெல்லி கண்காட்சியில் ஒய்இஸட் எப் ஆர்3 மற்றும் ஒய்இஸட்எப் ஆர் 15 ரக மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த உள்ளது. இரண்டு மாடல்களை காட்சிக்கு வைத்தாலும் இந்த ஆண்டிலேயே எம்டி-03 மாடல் பைக்கை விற்பனைக்கு விட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 321 சிசி திறனுடன் 6 கியர்களைக் கொண்டதாக சந்தைக்கு வர உள்ளது. ஒய்இஸட்எப் ஆர் 15 ரக மாடல் 149 சிசி திறன் கொண்டதாகும். இதையும் விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹீரோ ஹெச்எக்ஸ் 250ஆர்
ஹோண்டா நிறுவனத்துடனான கூட்டணி முறிந்தாலும் தனித்துவமாக நின்று இன்றளவும் சந்தையில் முதலிடத் தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள ஹீரோ நிறுவனம் ஹெச்எக்ஸ்250ஆர் ரக மோட்டார் சைக்கிளை இங்கு காட்சிப் படுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பியூயல் ரேசிஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் மோட்டார் சைக்கிள் நிச்சயம் இளைஞர்களிடையே பெரும் வரவேற் பைப் பெறும். நான்கு வால்வு இன்ஜின் ஒற்றை சிலிண்டர் 249 சிசி திறன் உள்ள இந்த மோட்டார் சைக்கிள் 2.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொடுமாம்.
டிராம்ப் போனேவிலே ஸ்ட்ரீட் ட்வின்
டிராம்ப் நிறுவனம் 900 சிசி மோட்டார் சைக்கிளை இக்கண் காட்சியில் அறிமுகம் செய்கிறது. புதிய வடிவமைப்பு, அலாய் சக்கரங்கள், ஏபிஎஸ், வழுக்கு தளத்தில் சறுக்காமல் தடுப்பது, எளிதான கிளட், இன்ஜின் இம்மொபிலைசர், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது வெளிவந்துள்ளது.
பினெலி டிஆர்கே 502
இத்தாலியைச் சேர்ந்த பினெலி நிறுவனம் டிஆர்கே 502 என்ற ரக மோட்டார் சைக்கிளை இங்கு காட்சிப் படுத்த உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் மிலானில் நடைபெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 499 சிசி திறனுடன் இரட்டை சிலிண்டர் இன்ஜினைக் கொண் டது. சாகச பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. சாகச பயணத்துக்கென தனியாகவும், வழக்கமான சாலைகளில் ஓட்டுவதற்கென தனியாகவும் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் தயாரித் துள்ளது.
க்விட், டஸ்டர்
பிரான்ஸின் ரெனால்ட் நிறுவனம் மேம்பட்ட க்விட் ரகக் கார்களை இக்கண் காட்சியில் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள் ளது. க்விட் ரகக் கார் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. எனவே இதில் மேம்படுத்தப் பட்ட மாடலை காட்சிப்படுத்த ரெனால்ட் திட்டமிட்டுள்ளது க்விட் மற்றும் டஸ்டரை அடுத்தடுத்த நாளில் இந்நிறுவனம் அறிமுகப் படுத்த உள்ளது
ஹூண்டாய் டஸ்கான்
கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டஸ்கான் ரக எஸ்யுவி மாடல் காரை இங்கு காட்சிப்படுத்த உள்ளது. ஜெனிசிஸ் உள்ளிட்ட 17 தயாரிப்புகளை இங்கு காட்சிப்படுத்தப் போவதாக ஹூண்டாய் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ
சொகுசு கார் தயாரிப்பில் முன்னணி யில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறு வனம் தனது போலோ ஜிடிஐ ரக காரை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்து கிறது. உலக அளவில் மிகவும் அதிக விற்பனையாகும் கார் இது. வெளி நாட்டிலிருந்து உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது இந்த நிறுவனம்.
இதுபோன்ற ஆட்டோமொபைல் கண்காட்சிகள் மூலம் புதிய வரவுகளை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள் ளவும், இத்துறையில் எத்தகைய மாற் றங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதை இத்துறையினரே தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இது அமையும். ஆட்டோமொபைல் துறையின் ஆரோக்கி யமான வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இக்கண்காட்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT