Published : 15 Feb 2016 11:21 AM
Last Updated : 15 Feb 2016 11:21 AM
எதிலும் மாற்றம் தேவை என நினைக்கும் காலம் இது. ஆட்டோ மொபைல் துறைக்கு இது நூறு சதவீதம் பொறுத்தமானது. வெறுமனே வண்ணங்களில் மட்டுமே மாற்றம் செய்து வரும் வாகனங்களை மக்கள் விரும்பும் காலம் மலையேறிவிட்டது.
டெல்லியில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் விதவிதமான மோட்டார் சைக்கிள்களும் ஸ்கூட்டர்களும் காட் சிக்கு வைத்திருந்ததைப் பார்க்கும் போது வடிவமைப்பில் வித்தியாசமும், செயல்பாடுகளில் மாற்றமும் கொண்டு வருவதன் மூலம்தான் இந்த சந்தையில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வந்திருப்பது கண்கூடாக தெரிந்தது.
முதல் இரண்டு நாட்கள் ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்காகவும், பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதிவரை பொது மக்கள் பார்வைக்கும் கண்காட்சி திறக் கப்பட்டது. மொத்தம் 6 லட்சம் பேர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுள் ளனர். சுமார் 109 கார், மோட்டார் சைக்கிள் புதிதாக இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பாலிவுட் நட்சத்திரங்கள் அக்ஷய் குமார், கத்ரினா கைஃப், ரண்பீர் கபூர், ஜான் ஆப்ரஹாம், ஆலியா பட், அனில் கபூர், மனோஜ் பாஜ்பேயி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கண்காட்சியில் பங்கேற்று புதிய வாகனங்களை அறிமுகப் படுத்தினர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஜாகிர்கான், விராட் கோலி, பியூஷ் சாவ்லா, மூத்த வீரர் மொகிந்தர் அமர்நாத் உள்ளிட்டோர் கண்காட்சியில் வலம் வந்த பிரமுகர் களில் அடங்குவர்.
இந்திய நிறுவனங்கள் பஜாஜ், ராயல் என்பீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கவில்லை. அதேசமயம் ஜீப், போலாரிஸ், பெனெலி உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் முறை யாக களமிறங்கின.
ஹோண்டா நவி
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய நவி என்ற பெயரிலான மோட்டார் சைக் கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வடிவமைப்பும் தோற்றமும் கண் காட்சிக்கு வந்திருந்தவர்களை பெரிதும் கவர்ந்ததில் வியப்பில்லை.
ஹோண்டா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள நவி மாடல் மோட்டார் சைக்கிள் இந்நிறுவன ஆலையில் ஸ்கூட்டர் தயாரிக்கும் பிரிவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.
இரு சக்கர வாகன சந்தையில் நிலவும் கடும் போட்டியில் இது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என நிறுவனம் உறுதியாக நம்புகிறது. முதலில் மோட்டார் சைக்கிள் வாங்க விரும்பும் வாடிக்கையாளர், வித்தியா சத்தை விரும்புவோரை நிச்சயம் நவி கவரும் என்கிறார் ஹோண்டா நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷின்ஜி அயோமா.
ரூ. 50 ஆயிரத்துக்கும் குறை வாக இதன் விலையை நிர்ணயிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 4 ஸ்டிரோக் இன்ஜின் 110 சிசி திறன், செல்ஃப் ஸ்டார்ட் வசதி ஆகியவற்றோடு இது தயாராகிறது. குஜராத்தில் இந்நிறுவனம் தொடங்கியுள்ள நான்காவது ஆலையில் தயாரித்து இந்த ஆண்டு விற்பனைக்கு விட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பியாஜியோ அப்ரிலியா எஸ்ஆர் 150
இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின் புதிய ரக அப்ரிலியா ஸ்கூட்டர் (மோட்டார்) சைக்கிள் வித்தி யாசத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந் தது. ஸ்கூட்டரைப் போன்ற வடிவ மைப்பு. அதாவது முன்புறம் கால் களை வசதியாக வைத்து பயணம் செய்யலாம். அதேசமயம் மோட்டார் சைக்கிளில் பயன்படுத்தும் சக்கரங் கள், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பார்ப்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.
பியாஜியோவின் வெஸ்பா ஸ்கூட்டரில் பயன்படுத்தும் 150 சிசி என்ஜினுடன் இது வெளிவந்துள்ளது. நிறுவனத்துக்குச் சொந்தமான புணேயை அடுத்த பர்மாதி ஆலையில் இதைத் தயாரித்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சந்தையில் விற்பனைக்கு விட நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. ஸ்கூட்டரில் உள்ளதைப் போன்று ஆட்டோ கியர் இருப்பது இதில் கூடுதல் சிறப்பம்சம். நெரிசல் மிகுந்த சாலைகளில் கியரில்லாத வாக னங்கள் பெரிதும் வரவேற்பைப் பெறு கின்றன. ஸ்கூட்டர்கள் தற்போது பெண்கள் அதிகம் பயன்படுத்துவதால், மோட்டார் சைக்கிள் சக்கரத்துடன் வந்துள்ள அப்ரிலியாவுக்கு அமோக வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கும்.
வித்தியாசமாக முன்புறத்தில் இரண்டு சக்கரம் பின்புறத்தில் ஒரு சக்கரத்துடன் ஒரு அழகிய ஸ்கூட்ட ரும் பியாஜியோ அரங்கில் இடம் பெற் றிருந்தது. இந்த ஸ்கூட்டர் எப்போது அறிமுகமாகும் என்ற விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
யமஹா சிக்னஸ் ரேஇஸட்ஆர்
சீறிப் பாயும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் தனக்கென சிறந்த இடத் தைப் பிடித்துள்ள யமஹா நிறுவனம் ஆண்களுக்கென்றே ஸ்கூட்டரை அறி முகப்படுத்தியுள்ளது. சிக்னஸ் ரேஇஸட் ஆர் என்ற இந்த ஸ்கூட்டர் முன்புற டிஸ்க் பிரேக் வசதியுடன் 113 சிசி திறன் கொண்டதாக வெளிவந்துள்ளது.
ஸ்பிளெண்டர் ஐ ஸ்மார்ட்
ஹோண்டாவுடன் தனித்து வந்த பிறகு முழுவதும் ஹீரோ நிறுவன ஆராய்ச்சி மையத்தில் உருவானது ஐ ஸ்மார்ட். 110 சிசி திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளின் பிரேம், சேசிஸ் உள்ளிட்ட அனைத்துமே புதியது. வாகனம் ஓட்டு வதை எளிமையாகவும், சந்தோஷமாக வும் வைத்திருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக எரிபொருள் சிக்கனமானது. ஹீரோ தயாரிப்பில் அதிகம் விற்பனையாவது ஸ்பிளெண்டர் ரக மோட்டார் சைக்கிள்கள்தான். அதற்குக் காரணம் அது மிகுந்த எரிபொருள் சிக்கனமானது. அதே வழியில் ஐ ஸ்மார்ட் தொடரும் என நிறுவனத்தினர் நம்பிக்கை தெரி விக்கின்றனர்.
யுஎம் ரெனகேட் குரூயிஸர் பைக்
அமெரிக்காவைச் சேர்ந்த ரெனகேட் நிறுவனம் இந்தியாவின் யூனியன் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனத் தயாரிப்பு கள் முதல் முறையாக இக்கண்காட்சி யில் இடம்பெற்றன. ராணுவ பச்சை வண்ணத்தில் 300 சிசி திறன் கொண்ட கமாண்டோ மோட்டார் சைக்கிள் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. லோஹியா ஆட்டோ நிறுவனத்தின் அங்கமான யுஎம் நிறுவனத்தின் உத்தராகண்ட் காஷிபூர் ஆலையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் தயாராக உள்ளன.
இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. கமாண்டோ விலை ரூ. 1.59 லட்சம். ஸ்போர்ட் ரூ. 1.49 லட்சம், கிளாசிக் விலை ரூ. 1.69 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 300 சிசி திறனில் ரேடியேட்டர் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட சகல அம்சங்களுடன் வெளிவர உள்ள இந்த மோட்டார் சைக்கிள் இப்பிரிவில் பிற நிறுவனத் தயாரிப்புகளுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தனி நபர் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கும் மோட்டார் சைக்கிள் மற் றும் ஸ்கூட்டர்கள் புதிது புதிதாக வருவது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT