Published : 01 Feb 2016 11:57 AM
Last Updated : 01 Feb 2016 11:57 AM
எல்லா சாலைகளும் ரோம் நோக்கி செல்கிறது என்கிற சொற்றொடர் வரலாற்று சான்றாக இப்போதும் புழங்கி வருவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் சாலைகளின் வரலாறோ நாம் அறியாதது. அது மனிதன் கால்நடையாக நடக்கத்தொடங்கிய காலத்திலிருந்தே தொடங்கியது. மனிதனை நாகரிகம் நோக்கி நகர்த்திய கால்தடங்கள்தான் பின்னர் நடைபாதையாகி, சாலையாக மாறி உலகின் நிலப்பரப்புகளை இணைத்து, முடிவற்று நீண்டு கிடக்கிறது.
இந்திய சாலைகளின் தூரம்
எக்ஸ்பிரஸ் சாலை - 200 கிமீ
தேசிய நெடுஞ்சாலை - 96,260 கிமீ
மாநில நெடுஞ்சாலை - 1,31,899 கிமீ
முக்கிய மாவட்டச் சாலை - 4,67,763 கிமீ
கிராம மற்றும் இதர சாலைகள் - 26,50,000 கிமீ
இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் சாலை போக்குவரத்து விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 10.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சாலைகளின் மொத்த நீளம் தோராயமாக 33 லட்சம் கிலோ மீட்டர்கள். உலக அளவில் அதிக சாலைகள் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சாலைகளை பராமரிக்க ஆன செலவுகள். கோடிகளில் (அனைத்து சாலைகளும்) 60 சதவீத செலவுகள் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
உற்பத்தியில், தொழில்நுட்பத்தில், அறிவியலில் எவ்வளவுதான் முன்னேறியிருந்தாலும் உள்கட்டமைப்பு விஷயத்தில் பின்தங்கி இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீரானதாக இருக்காது. உள்கட்டமைப்பு விஷயத்தில் முதன்மையான பங்கு வகிப்பது சாலைகள்தான்.
அகமதாபாத்திலிருந்து வடோதராவை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலைதான் இந்தியாவில் மிகச் சிறந்த சாலை என பெயர் வாங்கியுள்ளது. அதுபோல குர்காவன் எக்ஸ்பிரஸ் சாலையில் டெல்லிக்கு நுழையும் டோல் பிளாசாவில் 32 நுழைவு வழிகள் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தனது திட்டங்களுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமும் நிதி திரட்டுகிறது.
சாலை மேம்பாடு மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை மேம்பாடு திட்டங்களுக்கு 7 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் சாலைகள் போடப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த திறனை 100 கிலோ மீட்டர்களாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
80 சதவீத பயணிகள் போக்குவரத்து, 65 சதவீத சரக்கு போக்குவரத்து சாலை வழியாக நடைபெறுகிறது.
இந்தியாவில் தற்போது மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையாக NH7 உள்ளது. வாரணாசியையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் இந்த சாலையில் நீளம் 4,572 கிலோ மீட்டர்கள்.
கிராஃபிக்ஸ்: தே.ராஜவேல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT