Published : 28 Dec 2015 10:34 AM
Last Updated : 28 Dec 2015 10:34 AM

குடித்திருந்தால் இந்த கார் ஸ்டார்ட் ஆகாது!

“குடி குடியை கெடுக்கும், குடிப் பழக்கம் உடலுக்குக் கேடு விளைவிக்கும்’’, என்ற வாசகங்கள் எத்தனை குடிமகன்களின் பார்வையில் பட்டிருக்கும். குடிப் பழக்கத்துக்கும் வாகன உலகத்துக்கும் என்ன தொடர்பிருக்க முடியும். ஒரே தொடர்புதான். ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.34 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இத்தகைய சாலை விபத்துகளில் 70 சதவீத விபத்துகளுக்குக் காரணமே குடி போதைதான்.

குடிப்பவர்கள் அதற்கான காரணத்தை அவரவர் தரப்பிலிருந்து கூறுவர். அவர்கள் பார்வையில் தங்களது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயல்வர். இதெல்லாம் இயற்கை. ஆனால் சட்டத்தின் முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றம்தான்.

சாலை சந்திப்புகளில் இப்போதெல் லாம் காவல்துறை நியான் விளக்கு போர்டுகளை வைத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். அதில் முக்கிய மானது குடி சார்ந்த பிரசாரம்தான். If you go to bar, don’t get into car.

இந்த பிரசாரம் கார் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல வாகனம் ஓட்டும் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும். ஆனால் இது சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் படுகிறதா அல்லது படித்துவிட்டு கண்டும் காணாதது போல செல்கிறார்களா என்பது அவரவர்க்கே வெளிச்சம். பிரசாரம், சட்ட திட்டம் இவற்றால் கிடைக்காத பலன் இனி தொழில்நுட்பம் மூலம் சாதிக்க முடியும் என்று ஹைதராபாதில் உள்ள ராணுவ கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னணுத்துறை மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

இவர்கள் உருவாக்கியுள்ள சாதனத்தை காரில் பொறுத்திவிட்டால், டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர் மது அருந்தியிருந்தால் கார் ஸ்டார்ட் ஆகாது. கடந்த வாரம் தங்களது தயாரிப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் காட்டி அவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளனர் ராணுவ கல்லூரி மாணவர்கள்.

இந்த சாதனத்துக்கு டாட் என்று பெயரிட் டுள்ளனர்.

அதாவது குடிபோ தையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் சாதனம் (Device Against Drunken Driving DADD) என்பதாகும். கேப்டன் கரண் கோஸ்வாமி, கேப்டன் ரஜீத் பஃம்பூ, கேப்டன் ஷிட்ஜி மிஸ்ரா ஆகியோரடங்கிய குழு இந்தக் கருவி யை உருவாக்கியுள்ளது. இந்தக் கருவி பொருத்தப்பட்ட காரில் மது அருந்திய ஒருவர் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முயன்றால் கார் ஸ்டார்ட் ஆகாது என்று உறுதிபடக் கூறுகிறார் கேப்டன் கோஸ்வாமி.

இந்தக் கருவியில் மைக்ரோ கண்ட்ரோலர் அதாவது ஜிஎஸ்எம் முறையில் செயல்படக் கூடியது மற்றும் வோல்டேஜ் ரெகுலேட்டர், மற்றும் மது வாடையை உணரும் சென்ஸார் மற்றும் சமிக்ஞை வெளிப்படுத்தும் பஸ்ஸர் ஆகியன உள்ளன.

இந்த கருவி உள்ள காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடனேயே மது பரிசோதனைக்கு கார் டிரைவர் உள்ளாக வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பதை உணரும் கருவி கண்டுபிடிக்கும் பட்சத்தில் காரின் என்ஜின் ஸ்டார்ட் ஆகாது. இந்தக் கருவியை உருவாக்க ஆன செலவு ரூ. 36,800. அதிக அளவில் இது தயாரிக்கப்படும் பட்சத்தில் இதன் விலை குறையலாம்.

கார் நிறுவனங்கள் தங்களுக் குள்ள பொறுப்புணர்வை உணர்ந்து இத்தகைய அவசிய மான கருவியை புதிய தயாரிப்புகளில் பொருத்த முன் வந்தால் விபத்துகள் பெருமளவில் குறையும். கார் மட்டுமின்றி அனைத்து வாகனங்களிலும் இதைக் கட்டாயமாக்கும் முடிவை அரசு எடுக்கும்பட்சத்தில் சாலை விபத்துகள் பெருமளவு குறையும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x