Published : 09 Nov 2015 11:58 AM
Last Updated : 09 Nov 2015 11:58 AM
அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி வார்டு பீச்சர், 1813 ஆம் ஆண்டு முதல் 1887 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த மதகுருமார் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. மேலும், மிகச்சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் கூட. இவர் அடிமைமுறை ஒழிப்பில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தவர்.
அடிமைத்தனத்திற்கு எதிரான கருத்துகளை தனது பேச்சில் வெளிப்படுத்தினார். பெண்களுக்கான வாக்குரிமையை ஆதரித்தவர். சமூக சீர்திருத்தத்திற்கான பணிகளை தனது வாழ்நாளில் மேற்கொண்ட ஹென்றி வார்டு பீச்சர் அமெரிக்காவின் புகழ்பெற்ற மனிதராக அறியப்படுகிறார்.
# மலையின் மேலே செல்வதைவிட மேலிருந்து கீழே வருவது எளிதானது; ஆனால் மேலிருந்து பார்க்கும் காட்சிகளே சிறந்தது.
# மற்றவர்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த தரத்திலான பொறுப்பை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.
# மகிழ்ச்சியாக இருக்கும் கலையானது, பொதுவான விஷயங்களில் இருந்து மகிழ்ச்சியை பிரித்தெடுக்கும் சக்தியில் உள்ளது.
# ஒவ்வொரு நாளைய பொழுதும் இரண்டு கைப்பிடிகளைக் கொண்டதாகவே வருகின்றது; ஒன்று கவலை, மற்றொன்று நம்பிக்கை.
# ஒருவர் கோபமாக இருக்கும்போது உங்களிடம் என்ன சொன்னார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
# தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை.
# நமது மிகச்சிறந்த வெற்றிகள் பெரும்பாலும் நமது மிகப்பெரிய ஏமாற்றங்களுக்குப் பிறகே வருகின்றது.
# நூலகம் என்பது ஆடம்பரமல்ல; ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று.
# நன்றி என்பது ஆன்மாவிலிருந்து மலரக்கூடிய சிறந்த அரும்புகளைப் போன்றது.
# புத்தகம் ஒரு சிறந்த துணை; ஏனென்றால் வீண் பேச்சு இல்லாத முழு உரையாடலை தருகின்றது.
# நாம் பெற்றோர்களாக ஆகும் வரை பெற்றோர்களின் அன்பு நமக்குத் தெரிவதில்லை.
# எப்படி நேசிப்பது என்பது தெரியும்வரை, எப்படி வழிபாடு செய்வது என்பது தெரியாது.
# அறியாமை உடையவர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT