Published : 19 Oct 2015 11:34 AM
Last Updated : 19 Oct 2015 11:34 AM
சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள இரண்டு ஜெர்மன் நிறுவ னங்கள் கடந்த வாரம் சென்னையை முற்றுகையிட்டன. பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடெஸ் பென்ஸ்.
இவை இரண்டும் ஜெர்மனி தயாரிப்புதான் என்றாலும் வெவ்வேறு நிறுவனங்கள். தற்போது எஸ்யுவி கார்களை அடுத்தடுத்த நாளில் அறிமுகப்படுத்தி கார் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
சென்னையில் உள்ள ஒரே கார் பந்தய மைதானமான இருங்காட்டுக்கோட்டையில் கடந்த வியாழக்கிழமை தனது எம் பிரிவில் இரண்டு எஸ்யுவி கார்களை அறிமுகப் படுத்தியது.
பிஎம்டபிள்யூ:
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம் என்ற பெயரில் இவை அறிமுகப்படுத்தப்பட்டன.
எஸ்யுவி கார்கள் சொகுசான பயணத்துக்கு மட்டுமல்ல பந்தய மைதானத்திலும், சாகச பயணங்களிலும் சிறப்பாக செயல்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவை இரண்டும் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அத்துடன் பந்தய மைதானத்தில் இந்தக் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு மற்றும் இதில் பயணிக்கும் வாய்ப்பையும் செய்தியாளர்களுக்கு இந்நிறுவனம் ஏற்படுத்தியிருந்தது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எம்:
டுவின் பவர் டர்போ சார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் உள்ளதால் இதன் செயல்திறன் அதிகம். இதன்செயல்திறன் 423 கிலோவாட் மற்றும் 575 ஹார்ஸ் பவர் கொண்டது. இதனால் 750 நியூட்டன் மீட்டர் சக்தி வெளிப்படும். இது 2,200 முதல் 5,000 ஆர்பிஎம் சக்தியை வெளிப்படுத்துவதால் 4.2 விநாடியில் 100 கி.மீ. வேகத்தைத் தொடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ ஆகும். இதன் விலை ரூ. 1.55 கோடி.
பிஎம்டபிள்யூ எக்ஸ்6 எம்:
இவை இரண்டுமே நான்கு சக்கர செயல் திறன் கொண்டவை. 8 கியர்களைக் கொண்டது. 8 ஏர் பேக்குகள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. டைனமிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இதன் விலை ரூ. 1.60 கோடி.
அடுத்த நாளே எஸ்யுவி பிரிவில் (வெள்ளிக்கிழமை) மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனம் ஜிஎல்இ எனும் பிரிவில் இரண்டு புதிய ரக எஸ்யுவியை சென்னையில் அறிமுகப்படுத்தியது. இந்தக் கார் அறிமுகத்தின் மூலம் எஸ்யுவி ரகத்தில் தனது தயாரிப்பையும் இணைத்துக் கொண்டுள்ளது பென்ஸ். ஜிஎல்இ 250 டி என்றும் ஜிஎல்இ 350 டி என்று இரண்டு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜிஎல்இ எஸ்யுவி காரில் 6 சிலிண்டர் என்ஜின் உள்ளது. இது மிகச் சிறந்த செயல்திறனை அளிக்கிறது. 6 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் ஜிஎல்இ 350 டி-யில் உள்ளது. இதன் குதிரை திறன் 2987 சிசி ஆகும். இது 190 கிலோவாட் (258 ஹெச்பி) திறனோடு 620 நியூட்டன் மீட்டர் செயல் திறன் கொண்டதாக உள்ளது. 2,143 சிசி இன்லைன் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் ஜிஎல்இ 250 டி காரில் உள்ளது. இது 150 கிலோவாட் (204 ஹெச்பி) செயல் திறன் மற்றும் டார்க் அளவு 500 நியூட்டன் மீட்டராக உள்ளது.
இதில் ஐந்து வெவ்வேறு கார் ஓட்டும் விதங்கள் உள்ளன. அதாவது கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்லிப்பரி, தனி நபர் மற்றும் சாகச பயணம் என உள்ளன. இதில் எந்த பகுதியில் பயணிக்கி றோமோ அந்த மாதிரியான பயணத்துக்கு ஏற்ப வாகன செயல்பாட்டை மாற்றிய மைக்க முடியும்.
ஜிஎல்இ 250 டி விலை ரூ. 59.95 லட்சம், ஜிஎல்இ 350 டி விலை ரூ. 71.14 லட்சம்.
எஸ்யுவி பிரிவில் தற்போது இரண்டு ஜெர்மனி தயாரிப்புகள் இந்திய சாலை களில் சீறிப்பாய உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT