Published : 19 Oct 2015 12:09 PM
Last Updated : 19 Oct 2015 12:09 PM

சமூக பொறுப்புணர்வு

சி எஸ்ஆர் என்று சொல்லக்கூடிய ``நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு” அடிப்படையில் 2014-ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களின் பட்டியலை உதய்பூர் ஐஐஎம், பியூச்சர்ஸ்கேப் மற்றும் வர்த்தக நாளிதழ், ஆகிய மூன்றும் சேர்ந்து வெளியிட்டிருக்கின்றன. இந்த ஆய்வில் கடந்த வருடம் 115 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இது இந்த வருடம் 216 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது.

*வரிக்கு பிறகான வருமானத்தில் டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனம் மிக அதிகமாக 7.4 சதவீதத்தையும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 7.3 சதவீதத்தையும் செலவிடுகின்றன.

* ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.711 கோடியை செலவிட்டுள்ளது. முழுமையான தொகையில் ரிலையன்ஸ் நிறுவனமே அதிகம் செலவிடுகிறது.

* 86 சதவீத நிறுவனங்கள் கல்விக்காக அதிகம் செலவிடுகின்றன.

* 80 சதவீத நிறுவனங்கள் சுகாதாரத்துக்கும், ஒரு சதவீத நிறுவனங்கள் ராணுவ வீரர்களுக்கும் செலவிடுகின்றன.

* 26 சதவீத நிறுவனங்கள் பல்லுயிர் பெருக்க கொள்கைக்கு (bio-diversity) செலவிடுகின்றன.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

* பெண் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சூழலில் கவனம் செலுத்துகிறது.



சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்வாதார பயிற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது.

* ஹரியாலி என்ற திட்டத்தின் மூலம் இதுவரை 79 லட்சம் மரங்களை நட்டுள்ளது. 11 மாநிலங்களில் 4,340 கழிப்பறைகளை பெண்களுக்காக அமைத்து கொடுத்துள்ளது.

முதன்மை திட்டம்

* 1996-ஆம் ஆண்டில் ஆனந்த் மஹிந்திராவால் தொடங்கப்பட்ட நான்கி காலி திட்டம். நோக்கம் 11 லட்சம் பின் தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம்,பைகள்,சீருடைகள் வழங்குவது மற்றும் வகுப்புகள் நடத்துவது.

* கடந்த நிதியாண்டில் செலவிட்ட தொகை 83.24 கோடி ரூபாய்.

டாடா பவர்

* கல்வி,சுற்றுப்புறச் சூழல், சுகாதாரம்,பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம்,திறன் மேம்பாடு, வளங்கள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்ற துறைகளில் டாடா பவர் கவனம் செலுத்தி வருகிறது.

முதன்மை திட்டங்கள்

* அழிந்து வரும் இனங்களை காப்பதற்காக 1975-ஆம் ஆண்டு “ஆக்ட் ஆப் மாஷிர்” என்ற திட்டத்தை டாடா பவர் நிறுவனம் தொடங்கியது.

* 2015 நிதியாண்டில் நிறுவனம் செலவிட்ட தொகை 31.1 கோடி ரூபாய்.

டாடா ஸ்டீல்

* ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள 500 கிராமங்களில் சுகாதாரம், கல்வி, நிலையான வாழ்வாதார வாய்ப்புகள், கலாச்சாரம் மற்றும் பல்வேறு இனங்களை பாதுகாத்தல் போன்றவற்றை செய்து வருகிறது.

முதன்மை திட்டம்

* மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தையின் வாழ்வை பாதுகாக்கும் விதமாக ``மான்சி” என்ற திட்டத்தை 2009-லிருந்து ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

*2014-15-ல் செலவிட்ட தொகை 171.46 கோடி ரூபாய்.

எல் அண்ட் டி

* நீர்வளம், சுகாதார வசதிகள், கல்வி, திறன் மேம்பாடு போன்றவற்றுக்கு செலவு செய்கிறது. ஹெச்ஐவி/எய்ட்ஸ் நோய்க்கு ஆலோசனைகள் வழங்குவது மற்றும் சோதனை மையங்களை ஏற்படுத்தி தருகிறது.

* தொழுநோய் மற்றும் காசநோய்க்கு சோதனை மையங்களும் ஆலோசனை மையங்களையும் அமைத்து கொடுத்துள்ளது.

முதன்மை திட்டம்

* மஹாராஷ்டிரா மாநிலம், பால்ஹர் மாவட்டத்தில் 50 தடுப்பணைகளை தற்போது கட்டுவதற்கு திட்டம் வகுத்துள்ளது. மொத்தம் 150 அணைகளை கட்டுவதன் மூலம் 75,000 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள்.



* கடந்த நிதியாண்டில் செலவிட்ட தொகை 76.54 கோடி ரூபாய்.

இன்ஃபோசிஸ்

ஊட்டச்சத்து, சுகாதார கட்டமைப்பு, ஆரம்பக் கல்வி, இந்திய கலை மற்றும் கலாச்சாரங்களை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்த திட்டங்களை இன்ஃபோசிஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.

* பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி மற்றும் பயிற்சியையும் வழங்கி வருகிறது.

முதன்மை திட்டம்

இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் அக்‌ஷயா பாத்திர அறக்கட்டளையுடன் இணைந்து மதிய உணவு திட்டத்தை பல மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறது.

* நிறுவனம் செலவிட்டுள்ள தொகை 243 கோடி ரூபாய்

பாரத் பெட்ரோலியம்

*தரமான கல்வி, நீர் பாதுகாப்பு, பின் தங்கியுள்ளவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி, கிராமப்புற சுகாதார மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.

முதன்மை திட்டம்

* வறட்சி இல்லாத கிராமங்களை உருவாக்க மழை நீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வரும் பூண்ட் திட்டம் முதன்மையானது.

* கடந்த நிதியாண்டில் நிறுவனம் ஒதுக்கிய தொகை ரூ.76 கோடி. அதில் தற்போது செலவிடப்பட்டது 33.95 கோடி ரூபாய்.

ஜிபிலியண்ட் லைப் சயின்ஸஸ்

* ஆரம்ப கல்வி, சுகாதார குறியீடுகளை உயர்த்தும் நடவடிக்கைகள், வேலை வாய்ப்பை உருவாக்குதல், சமூக தொழில்முனைவோர் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது

முதன்மை திட்டம்

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் விதமாக ஜிபிலியண்ட் பார்தியா பவுண்டேசன் மூலம்,

* குழந்தையின் வளர்ச்சியை நோக்குதல், ஊட்டச்சத்துள்ள பொருட்களை கொடுத்தல், தாய்ப்பால், ஐந்து வயது வரை குழந்தையின் வளர்ச்சியை கவனித்தல் போன்றவற்றை செய்து வருகிறது.

கெயில்

* பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள 500 மாணவர்களுக்கு பொறியியல் படிப்பு பயில்வதற்கும் ஐஐடி/என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை, தங்கும் வசதி போன்றவற்றையும் செய்து வருகிறது.

முதன்மை திட்டம்

*கெயில் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் என்ற கல்வி நிறுவனம் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மாணவர்கள் திறனை பெற பயிற்சி அளிக்கிறது.

*கடந்த நிதியாண்டில் செலவிட்ட தொகை 71.89 கோடி ரூபாய்.

டாடா கெமிக்கல்ஸ்

சூழலியல் மண்டலத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது

முதன்மை திட்டம்

* திமிங்கலம் மற்றும் சுறா மீன்களை பாதுக்காக்கும் விதமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கிறது.

* கடந்த ஆண்டு வரிக்கு பிந்தைய வருமானத்தில் 2.93 சதவீதம் செலவு செய்துள்ளது. இது 12.76 கோடி ரூபாய்.

டாடா மோட்டார்ஸ்

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்புக்கான திறன் மேம்பாடு பயிற்சியை அளித்து வருகிறது. இந்த நிறுவனம் தனியாக சிஎஸ்ஆர் குழுவையே வைத்துள்ளது.

முதன்மை திட்டம்

* லீப் (LEAP) என்று சொல்லக்கூடிய கற்றல், வருமானம், வளர்ச்சி என்பதைக் கொண்டு மோட்டார் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

* 2014-15 நிதியாண்டில் செலவிட்ட தொகை 18.62 கோடி ரூபாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x