Published : 10 Aug 2015 11:14 AM
Last Updated : 10 Aug 2015 11:14 AM

எரிசக்தி: ஒரு புள்ளிவிவரம்

மின்சாரம் மற்றும் பெட்ரோலில்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. பெட்ரோலுக்காக மூளும் யுத்தங்களும், உள்நாட்டுக் கலவரங்களும் மத்திய ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளை அச்சத்திலேயே வைத்திருக்கின்றன என்றால் மிகையில்லை. அதுபோல மின்சார உற்பத்திக்கான மாற்று வழிகளையும் உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. உலகை இயக்கும் இந்த இரண்டு சக்கரங்கள் குறித்தும் சில விவரங்கள்.

உலக அளவிலான மின்சார பயன்பாடு ஆண்டுவாரியாக கணக்கெடுக்கப்படுகிறது. மனித வளம் பொருளாதாரம் அரசியல் என எல்லாவற்றிலும் மின்சாரம் உற்பத்தி திறன் எதிரொலிக்கிறது. இண்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்சி, எனர்ஜி இன்பர்மேஷன் அட்மினிஸ்டிரேஷன், ஐரோப்பிய சுற்றுச்சூழல் ஏஜென்ஸி அமைப்புகள் மின்சார பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன.

2012 கணக்குபடி உலக அளவின் மின்சார பயன்பாடு 1,55,505 டெராவாட்-ஹவர்(TWh) ஆக இருக்கிறது. அணுசக்தியிலிருந்து பெறப்படும் மின்சாரம் குறைவான அளவே கிடைக்கிறது. உலக அளவிலான ஜிடிபி யில் 10 சதவீதம் உள்ளது. அமெரிக்க மின்சாரத்திற்காக 20 சதவீதமும், ஜப்பான் 6 சதவீதமும் செலவு செய்கிறது.

2014 புள்ளிவிவரப்படி உலக அளவில் மின்சார பயன்பாடு 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x