Published : 30 Dec 2019 11:04 AM
Last Updated : 30 Dec 2019 11:04 AM
சீனாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹெய்மா விரைவில் இந்தியச் சந்தையில் கால்பதிக்க உள்ளது. இதுநாள் வரையில் ஊகமாக கூறப்பட்டுவந்த இந்தத் தகவல், தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் வாகனச் சூழல் என்ன, இந்திய சந்தையில் மக்கள் எவ்வகையான கார்களை எதிர்பார்க்கிறார்கள் போன்ற புள்ளிவிவரங்களை இந்நிறுவனம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
உற்பத்தி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பேர்ட் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் கூட்டமைத்து இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளது. இந்நிறுவனம் எவ்வகையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தப் போகிறது என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பேர்ட் நிறுவனத்துடன் கூட்டமைப்பு வைத்து இருப்பதால் நிச்சயம் அது எலக்ட்ரிக் கார்களாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2020 வாகனக் கண்காட்சியில் அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளது. ஏற்கெனவே கிரேட் வால் மோட்டர்ஸ் என்ற சீன கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய வாகனச் சந்தையில் முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில் அந்த வரிசையில் ஹெய்மாவும் தற்போது இணைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT