Published : 27 Jul 2015 10:49 AM
Last Updated : 27 Jul 2015 10:49 AM

புதிய தலைமுறை ஹோண்டா `ஜாஸ்’

கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹோண்டா நிறுவனம் 3-ம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார்களை சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இது வெளிவந்துள்ளது. அற்புதமான ஸ்டைலிங், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங் களாகும்.

விலை அதிகமாக இருந்ததால் ஜாஸ் கார்களின் விற்பனை ஒரு கட்டத்தில் தேக்கமடைந்தது. இதைப் போக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் வந்துள்ள காரின் விலை குறைவாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதனால் இப்பிரிவில் உள்ள பிற நிறுவனத் தயாரிப்புகளுக்கு கடுமையான போட்டியாக ஜாஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹோண்டா ஜப்பானின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இது உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்களின் தேவைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள் ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்துள்ளார்.

எர்த் டிரீம் தொழில்நுட்ப வரிசையில் 1.5 லிட்டர் ஐ-டிடிஇசி டீசல் இன்ஜின் இதில் உள்ளதால் லிட்டருக்கு சோதனை ஓட்டத்தில் 27.3 கி.மீ. தூரம் வரை இது ஓடியது. இந்த என்ஜினின் அதிகபட்ச ஆற்றல் 100 பிபிஎஸ் @ 6,000 ஆர்பிஎம் ஆகும். இதன் அதிகபட்ச இழுவிசை 110 என்-எம் 4800 ஆர்பிஎம் ஆகும். பெட்ரோல் மாடல் கார்கள் ஒரு லிட்டருக்கு சோதனை ஓட்டத்தில் 19 கி.மீ. தூரம் ஓடியது.

புதிய ஜாஸின் வெளிப்புற வடிவமைப்பு ஒரு துடிப்பான மற்றும் சிறந்த கேபின் வடிவமைப்பினை அதாவது குறிப்பிடத்தக்க அளவு அகலம் மற்றும் நிலைப்புத் தன்மை யுடன் அளிக்கிறது. நேர்த்தியான வடி வமைப்பு காருக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. எல்இடி டெயில் மற்றும் ஸ்டாப் லேம்ப், டெயில் கேட் ஸ்பாயிலர், ரியர் மைக்ரோ ஆன்டெனா, 15 அங்குல ஸ்போர்டி அலாய் வீல், ஸ்டைலான ஃபாக் விளக்குகள், கதவு கண்ணாடிகளில் உள்ள டர்ன் இன்டிகேட்டர் ஆகியன காருக்கு மேம்பட்ட தோற்றத்தை அளிக்கிறது.

காருக்கு சோபிஸ்டிகேடட் காக்பிட் வசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளதால் பயணம் சொகுசானதாக அமையும். தொடு திரை வசதியுடன் கூடிய ஆட்டோ ஏசி, ஹேண்ட் பிரீ கண்ட்ரோலுக்கு ஏற்ப பட்டன்களுடன் கூடிய ஸ்டீரிங் வீல், 5 அங்குல திரை, பின்பக்க கேமிரா உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. ஆடியோ விஷுவல் நேவிகேஷன் வசதி, டிவிடி பிளே பேக் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். இதில் உள்ள இருக்கைகளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

பாதசாரிகள் காயம்படாத வகையிலான தொழில்நுட்பம், ஓட்டுநர், முன்புற பயணி களைக் காக்கும் 2 ஏர் பேக், சக்கரம் நின்று போவதைத் தடுக்கும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், மேலும் இதன் செயல் திறனை மேம்படுத்த உதவும் எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்டிரிபியூஷன் (இபிடி) ஆகியன இதில் உள்ளன. முன்பக்க இருக்கைகள் இம்பேக் மிடிகேஷன் ஹெட் ரெஸ்ட் உள்ளதால் குறைவான வேகத்தில் பின்பக்க மோதலின் காரணமாக கழுத்து காயம்படுவது தவிர்க் கப்படுகிறது. 7 குதூகலமூட்டும் வண்ணங் களில் இது வெளிவந்துள்ளது.

2 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 40 ஆயிரம் கி.மீ தூரம் வரை நிறுவனம் வாரண்டி அளிக்கிறது. முந்தைய மாடல் காரை விட புதிய தலைமுறை ஜாஸ் 95 மி.மீ. நீளம் அதிகமாகும். அத்துடன் சக்கரத்தின் விட்டம் 30 மி.மீ. அதிகமாகும்.

முந்தைய மாடலைவிட இது பலவகையில் சொகுசான பயணத்தை உறுதியாக அளிக்கக் கூடியது. முந்தைய மாடல் விலை ரூ. 7.40 லட்சத்தில் தொடங்கியதால் இதன் விற்பனை ஒரு கட்டத்தில் மந்தமடைந்தது. இப்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் சிறப்பாக வெளிவந்துள்ள ஹோண்டா ஜாஸ் மாடல் காரின் ஆரம்ப விலை ரூ. 5.40 லட்சமாகும். இதனால் இது மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x