Published : 01 Jun 2015 11:06 AM
Last Updated : 01 Jun 2015 11:06 AM
Title: Coaching in a Week
Author: Matt Somers
Publisher: Hodder and Stoughton
ஒரே வாரத்தில் பயிற்சி பற்றிய அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ளும் வகையில், வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு மாதிரியான, பயிற்சி பற்றிய கருத்துகளைக் கொண்டுள்ளது இந்தப் புத்தகம். பயிற்சியின் தத்துவம், ஒரு மேலாளர் எவ்வாறு பயிற்சியாளராகலாம்?, பயிற்சியின் தனிப்பட்ட பண்புகள், பயிற்சியினை நடைமுறைப்படுத்துதல், பயிற்சிக்கான அறிவாற்றல் மற்றும் நிறுவனங்களில் அளிக்கப்படும் பயிற்சி முறைகள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
Title: Coaching for Growth
Author: Peter Bolt
Publisher: Prentice Hall of India
பயிற்சியானது வெறுமனே செயல்பாட்டோடு நின்றுவிடாமல், அதன்மூலம் வளர்ச்சி கிடைக்கவேண்டும் என்பதைப் பற்றிய செய்திகளைப் பற்றி பேசுகின்றது இந்த புத்தகம். பயிற்சியின் மூலம் நம்மிடமிருந்தும், நம்முடைய குழுவிடமிருந்தும் சிறந்தவற்றை எப்படி வெளிக் கொண்டுவருவது என்பதைப்பற்றி சொல்லித்தருகின்றார் ஆசிரியர் பீட்டர் போல்ட். ஒரு மேலாளர், தன்னுடைய பணியாட்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான, பயிற்சி பற்றிய அனைத்து அடிப்படை விஷயங்களையும் பேசுகின்றது. மேலும், பயிற்சியின்போது செயல்படுத்தப்படும் செயல்பாட்டு முறைகளையும் சொல்கின்றது.
Title: Coaching People
Author: HBS
Publisher: Harvard Business School Press
நமது எந்தவொரு செயலுக்கும் பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு இடையேயான தொடர்பை பயனுள்ளதாக்கும் ஆற்றல் பயிற்சிக்கு உண்டு. அப்படிப்பட்ட பயிற்சியினைப் பற்றியும், ஊழியர்களுக்கான ஊக்கமளித்தல் பற்றியும் பேசுகின்றது இந்தப் புத்தகம். எப்பொழுது பயிற்சியளிக்க வேண்டும்?, சரியான குறிக்கோளுடன் பயிற்சியளித்தல் மற்றும் பயிற்சியில் உங்களுக்கென்ற தனிப்பட்ட பாணி போன்ற விஷயங்களைப்பற்றிய விளக்கங்களைக் கொண்டுள்ளது.
Title: Corporate Coaching
Author: Sraban Mukherjee
Publisher: Sage Publications
நிறுவனங்களுக்கான பயிற்சி பற்றி விரிவாகப் பேசுகின்றது இந்தப் புத்தகம். எவரும் பயிற்சியாளராகும் வகையில் எளிமையான விளக்கங்களுடன், பயிற்சி பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்துகின்றது. பயிற்சிக்கான அடிப்படை விஷயங்கள் மற்றும் செயல்முறை பற்றிய அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் கருத்துகளைக் கொடுத்துள்ளார் ஆசிரியர். தலைமைப் பண்பிற்கான பயிற்சி, அறிவாற்றலுக்கான பயிற்சி, நடத்தை விதிகளுக்கான, செயல்திறனுக்கான பயிற்சி பற்றி சொல்கிறார் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT