Published : 15 Jun 2015 10:23 AM
Last Updated : 15 Jun 2015 10:23 AM
Title: How to be a better… Problem Solver
Author: Michael Stevens
Publisher: Kogan Page India Private Limited
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறனானது ஒவ்வொரு மேலாளருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாக இன்றைய மேலாண்மையியலில் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட திறனுடையவரே மாற்றங்களை விரைவாக ஏற்றுக்கொள்பவராகவும், சிறந்த சாதனையாளராகவும் மாறுகின்றார் என்கின்றது இந்த புத்தகம். பிரச்சினைகளை அடையாளம் காணுதல் மற்றும் வரையறுத்தல், பிரச்சினைகளுக்கான பயனுள்ள மற்றும் நடைமுறை சார்ந்த தீர்வினை எட்டுதல், குழு செயல்பாடு புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளுதல் பற்றியும் பேசுகின்றது.
Title: Creative Problem Solving
Author: Donald H Weiss
Publisher: Amacom
இன்றைய மேலாளர்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது பணியாளர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமின்றி நிறுவனத்தின் சிக்கல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைச் சொல்கின்றது இந்த புத்தகம். சிக்கல்களை தீர்ப்பதற்கான குழுவினை நிர்ணயம் செய்தல், ஏற்படும் சிக்கலின் மையப் புள்ளியினைக் கண்டறிதல் மற்றும் பிரச்சினைக்கு முன்பாகவே அதற்கான திட்டத்தை வடிவமைத்தல் போன்றவற்றைப் பற்றி பேசுகின்றது. மேலும், பிரச்சினையின் தன்மையினைக் கண்டறிந்து அதற்கு பொதுவான தீர்வை எட்டுவதற்கான நிரூபிக்கப்பட்ட உத்திகளையும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
Title: Management Guide to Solving Problems
Author: Kate Keenan
Publisher: Pustak Mahal
கடினமான சூழ்நிலைகளில் தோன்றும் சிக்கல்களை எவ்வாறு சமாளித்து வெற்றி பெறுவது என்பதற்கான புத்தகம் இது. பிரச்சினைகள் எதனால் ஏற்படுகிறது? அதன் சாராம்சம் என்ன? போன்ற பிரச்சினை தொடர்பான அடிப்படை விஷயங்களைப்பற்றி பேசுகின்றது. தீர்விற்கான முயற்சியினை மேற்கொள்ளுதல் மற்றும் முடிவுகள் எடுப்பதற்கான செயல்பாட்டு முறைகள் ஆகியவற்றிற்கான வழிமுறைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மேலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள நம்முடைய அணுகுமுறை, பிரச்சினைகளால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றைப் பற்றியும் பேசுகின்றது.
Title: Problem-Solving
Author: Dandi Daley Mackall
Publisher: Viva Books Private Limited
சரியான முறையில் பிரச்சினைகளை அடையாளம் காண்பதே, அவற்றை விரைவாக தீர்ப்பதற்கான சிறந்த திறன் என்கிறார் ஆசிரியர். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழில் மற்றும் வேலைக்கும் தேவையான இத்திறனை மேம்படுத்திக்கொள்வது தொடர்பான வழிகளைச் சொல்கின்றது இந்த புத்தகம். பிரச்சினைகள் மீதான அறிவியல் ரீதியிலான அதேசமயம் ஆக்கப்பூர்வமான நம்முடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்கின்றது. ஆரம்பம் முதல் அதன் தீர்வு வரையிலான அனைத்து செயல்முறைகளும் தனிதனி பகுதிகளாக விளக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT