Published : 11 May 2015 11:05 AM
Last Updated : 11 May 2015 11:05 AM

புத்தக அலமாரி - 11.05.2015

Title: Conquer Fear!

Author: Lisa Jimenez

Publisher: Macmillan

நமக்கான வாய்ப்புகளை தடுத்து முன்னேற்றத்துக்கு தடைகளை ஏற்படுத்துவது நம்முடைய பயமே. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இவற்றிலிருந்து மாற்றத்தினைக் கொண்டுவந்து, வெற்றியினை நோக்கிச் செல்லும் வழிமுறைகளைப் பற்றிச் சொல்கிறது இந்த புத்தகம்.

நிராகரிப்பின் பயம், முடிவுகள் எடுப்பதில் உள்ள பயம், மாற்றத்துக்கான பயம், தோல்வியின் பயம் மற்றும் வெற்றியிலும் பயம் போன்றவற்றிலிருந்து மீள்வதற்கான செயல் திட்டங்களைப்பற்றி சொல்கின்றார் ஆசிரியர்.

Title: Breaking the Fear Barrier

Author: Tom Rieger

Publisher: Gallup Press

ஒரு நிறுவனத்தின் மோசமான எதிரி அதன் போட்டியாளர்கள் மட்டுமல்ல. அதைவிட முக்கியமானது அந்த நிறுவனத்துக்குள்ளாகவே இருக்கும் பயமே என்கிறார் ஆசிரியர். அந்த பயம் எவ்வாறு நிறுவனத்தை அழிவை நோக்கி கொண்டு செல்கின்றது என்பதையும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்ன? என்பதையும் பேசுகிறது இந்த புத்தகம்.

நிகழ் உலக பாடங்களின் மூலம், பயத்தின் வாயிலாக ஏற்படும் தடைகளை தகர்த்தெறிவதற்கான உத்திகளை மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Title: Feel the Fear and Do it Anyway

Author: Susan Jeffers

Publisher: Vermilion

வாழ்வின் அனைத்துவித பயங்களுக்குமான தீர்வுகளை விளக்கும் புத்தகம் இது. தனிமை, பணிமாற்றம், முதுமை மற்றும் இழப்பு போன்ற மாறுபட்ட சூழ்நிலைகளை கையாளுவதற்கான ஆற்றலை அதிகரிக்கச்செய்யும் உத்திகளைச் சொல்லித் தருகின்றார் இதன் ஆசிரியர்.

பல்வேறு நிலைகளில் எடுக்கப்படும் முடிவுகள், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்துதல் மற்றும் வலிகளையும், தோல்விகளையும் வெற்றிக்கான சக்திகளாக மாற்றுதல் போன்ற கருத்துகளைப் பற்றி பேசுகின்றது.

Title: The Secret to Conquering Fear

Author: Mike Hernacki

Publisher: Magna Publishing

வளர்ச்சியினை பாதிக்கும் நிலைக்கு நம்முடைய பயத்தினை அனுமதிக்கக் கூடாது. அவற்றை வெற்றிகொள்ள வேண்டும். இதற்கான உத்திகளையும், சிறந்த வாழ்க்கைக்கான சூட்சுமங்களையும் சொல்கின்றது இந்த புத்தகம்.

மேலும், ஒருபோதும் பயத்தினை நாம் ஒதுக்கிவைத்துவிடமுடியாது என்று சொல்லும் புத்தகம், எப்பொழுது பயம் நமக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றது என்பதைப் பற்றிய விரிவாக புரிய வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x