Published : 16 Mar 2015 10:53 AM
Last Updated : 16 Mar 2015 10:53 AM
Title: 12 Steps to a Better Memory
Author: Carol Turkington
Publisher: Goyal Books
பிறந்தநாள் போன்ற முக்கியமான நாட்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் மறந்துவிடுவது, அவசரத் தேவைக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் ஆவணங்களை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் தேடிக்கொண்டிருப்பது ஆகியவற்றிற்கு தீர்வாக 12 எளிய வழிகளில் நமது நினைவாற்றலை சிறந்ததாகவும், வலிமையானதாகவும் மேலும், பெறப்பட்ட விஷயங்களை திரும்பவும் மறந்துவிடாமல் தொடர்ந்து நமது நினைவில் தக்கவைத்துக்கொள்ளவும் சொல்லித்தருகிறார் ஆசிரியர்.
Title: Memory
Author: William Walker Atkinson
Publisher: Manjul Publishing House
நினைவாற்றலின் வளர்ச்சி, பயிற்சி மற்றும் பயன்பாடு ஆகியவற்றைக் கற்றுத்தரும் புத்தகம் இது. நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளுதல், மேம்படுத்துதல் மற்றும் நினைவாற்றலில் ஆழ்மனதின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் பேசுகின்றது.
பெயர்கள், இடங்கள், அடையாளங்கள், எண்கள், வார்த்தைகள், புத்தகம், இசை, கதை மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்வதற்கான எளிமையான உத்திகளை சொல்லித்தருகின்றார் ஆசிரியர். மேலும், நினைவாற்றலின் முக்கியத்துவம், அமைப்பு, கவனம், ஆகியவற்றைப் பற்றியும் கண்கள், காதுகளுக்கான பயிற்சிகள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.
Title: Improving Your Memory
Author: Janet Fogler and Lynn Stern
Publisher: Emerald Publishers
நமது நினைவுத்திறன் எவ்வாறு வேலை செய்கின்றது?, அதன் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றது? மற்றும் நினைவுத்திறனின் மேம்பாடு போன்றவற்றைப்பற்றி விவாதிக்கின்றது இந்த புத்தகம்.
நமது செயல்களை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருதல், அதற்கு தேவையான முயற்சிகள் மற்றும் மன அழுத்தம், இயலாமை, உற்சாகமின்மை ஆகிய பலதரப்பட்ட, நினைவாற்றலை பாதிக்கும் காரணிகள் ஆகியவற்றைபற்றி விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
Title: Super Memory
Author: Shakuntala Devi
Publisher: Orient Publishing
அடிக்கடி நமது ஞாபகத்திலிருந்து விலகிச் செல்லும் விஷயங்களை மீண்டும் நினைவில் தக்கவைத்து அதனை சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொள்வதற்கான புத்தகம் இது.
சுறுசுறுப்பான, கூர்மையான மனதின் மூலம் நமது நம்பிக்கையை வளரச்செய்யும் வழிகளைச் சொல்வதோடு குறிப்புகள் இல்லாமல் நமது வாதங்களை திறம்பட எடுத்துரைக்க தேவையான பயிற்சிகள் பற்றியும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT