Published : 16 Mar 2015 10:07 AM
Last Updated : 16 Mar 2015 10:07 AM

இயந்திர காசாளர்

வங்கிகளில் காசாளருக்கு மாற்றாக முற்றிலும் இயந்திரங்கள் மூலம் கணினி கட்டுப்பாட்டில் இயங்கும் இயந்திர காசாளரின் மறுபெயர்தான் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம்.

$ 1972-ம் ஆண்டு இங்கிலாந்தில் லாயிட்ஸ் வங்கிதான் ஏடிஎம் சேவையை முதலில் அறிமுகப்படுத்தியது.

$ 1987-ம் ஆண்டு இந்தியாவில் முதலில் ஏடிஎம் சேவையை ஹெச்எஸ்பிசி வங்கி அறிமுகப்படுத்தியது.

$ பொதுத்துறை வங்கிகளில் முதலில் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) அளித்தது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாதான்.

$ 1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை பணம் போடவும், பணத்தை எடுக்கவும்தான் ஏடிஎம் பயன்படுத்தப்பட்டது.

$ 1995-ம் ஆண்டில் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு தகவலை அளிக்கும் (மினி ஸ்டேட்மென்ட்) வசதி அறிமுகமானது.

$ 2002-ம் ஆண்டில் காசோலை கோரிக்கை, கணக்கிற்கு மாற்றும் வசதி, தொடு திரை வசதிகள் அறிமுகமானது.

$ 2004-ம் ஆண்டு ரயில்வே, ஏர்லைன்ஸ் டிக்கெட் பதிவு செய்வது, பில் பேமென்ட், செல்போன் ரீசார்ஜ் வசதிகள் அறிமுகமானது.

$ 2007-ம் ஆண்டில் பயோ-மெட்ரிக் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான ஏடிஎம்கள் புழக்கத்துக்கு வந்தன.

$ வங்கிகள் அமைக்கும் ஏடிஎம்கள் தவிர பிரவுன் லெவல் ஏடிஎம், வொயிட் லெவல் ஏடிஎம் என இரு பிரிவுகளிலும் ஏடிஎம்கள் அமைக்கப்படுகின்றன.

$ பிரவுன் லெவல் ஏடிஎம்களை நிறுவி அதை தனியார் நிறுவனமே நிர்வகிக்கும். இதற்கான இணைப்பு, பண பரிவர்த்தனை நிர்வாகத்தை வங்கிகள் மேற்கொள்ளும். இத்தகைய ஏடிஎம்களை பல வங்கிகளும் பகிர்ந்து கொள்ள முடிவதால் நிர்வாகச் செலவு குறைந்துள்ளது.

$ வொயிட் லெவல் ஏடிஎம்களை வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. ரூ.100 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இதை அமைக்கலாம். இந்த ஏடிஎம்கள் அனைத்து வங்கிகளின் அட்டைகளையும் ஏற்கலாம்.

$ வொயிட் லெவல் ஏடிஎம்களை வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. ரூ.100 கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இதை அமைக்கலாம். இந்த ஏடிஎம்கள் அனைத்து வங்கிகளின் அட்டைகளையும் ஏற்கலாம்.

$ 55 வங்கிகள் கிளைகளுடன் இணைந்து நிர்வகிக்கும் ஏடிஎம்களின் எண்ணிக்கை 92,878

$ கிளைகள் இல்லாத தனியிடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம்களின் எண்ணிக்கை 82,081

$ வங்கிகள் வழங்கியுள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2,01,41,291

$ வங்கிகள் வழங்கியுள்ள டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை 46,61,41,520

$ ஏடிஎம்களில் மாதத்துக்கு சராசரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பண பரிவர்த்தனை நடைபெறுகிறது.

$ இந்தியாவில் சண்டீகரில்தான் அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. 1,505 பேருக்கு ஒரு ஏடிஎம் வீதம் இங்கு உள்ளது.

$ பிஹாரில் 19,000 பேருக்கு ஒரு ஏடிஎம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x