Published : 02 Feb 2015 12:27 PM
Last Updated : 02 Feb 2015 12:27 PM
Title: Changing Minds
Author: Howard Gardner
Publisher: Harvard Business School Press
நம் மனதை திறம்பட மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் எளிதில் வெற்றிபெறமுடியும் என்பதற்கான புத்தகம் இது. மனம் என்றால் என்ன? அது எவற்றை உள்ளடக்கியது, மனதின் வடிவங்கள் என்ன? போன்ற மனம் சார்ந்த அடிப்படை தகவல்களை தந்துள்ளார் ஆசிரியர்.
மனதிற்கான மாற்றத்தின்போது ஏற்படும் நிகழ்வுகளின் கட்டமைப்பைப்பற்றியும், எப்படி படிப்படியாக இந்த மாற்றத்தினைச் செயல்படுத்துவது என்பதைப்பற்றியும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
Title: Secrets of Mind Power
Author: Harry Lorayne
Publisher: Pustak Mahal
மைண்ட் பவர் என்னும் நமது ஆழ்மன சக்தியின் ரகசியங்களைப் பற்றி சொல்கின்றது இந்தப் புத்தகம். மன சக்தியை எப்படி முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வது மற்றும் அதன் செயல்பாட்டினை எவ்வாறு திறமையானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றிக்கொள்வது என்பதைப்பற்றியும் கற்றுக்கொடுகின்றார் ஆசிரியர்.
மேலும், மனமே ஒருவரின் சக்திவாய்ந்த ஆசான் என்று சொல்லும் ஆசிரியர், நல்ல பழக்கவழக்கங்களை மேலும் வலுப்படுத்தவும் அதேசமயம் தீயவற்றை விட்டொழிக்கவும் தேவையான குறிப்புகளையும், மற்றவர்கள் மீதான நமது நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தந்துள்ளார்.
Title: Organize Your Mind Organize Your Life
Author: Paul Hammerness and Margaret Moore
Publisher: Harlequin
மனதை ஒழுங்குபடுத்துவதன்மூலம் நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த முடியும் என்று சொல்லும் இந்த புத்தகத்தில், அன்றாட வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மனதைப் பெறுவதற்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவரின் தனிப்பட்ட திறனை மேம்படுத்தி, குறைந்த நேரத்தில் அதிகப்படியான பலனை பெறுவதற்கு உதவுவதாக இந்த விதிகள் சொல்லப்பட்டுள்ளன. நமது மூளையின் செயல்பாட்டு முறைகளையும், நடைமுறை சார்ந்த அம்சங்களையும் உள்ளடக்கியது இந்த புத்தகம்.
Title: The Emerging Mind
Author: Vilayanur S Ramachandran
Publisher: Profile Books Ltd
நமது மூளையின் ஆற்றலைப்பற்றி பேசும் புத்தகம் இது. நமது மூளை தொடர்பான, தத்துவ ரீதியிலான பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட பண்புகள், கலை, தத்துவம், குடும்ப மற்றும் சமூக தொடர்புகள் போன்ற பல அம்சங்களையும் எளிமையாகக் கொடுத்துள்ளார் ஆசிரியர்.
நம்மால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பின்னால் இருக்கும் நமது மனதின் செயல்முறைக்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT