Last Updated : 07 Aug, 2017 12:20 PM

 

Published : 07 Aug 2017 12:20 PM
Last Updated : 07 Aug 2017 12:20 PM

சந்தைக்கு வர உள்ள பேட்டரி கார்கள்!

மா

ற்று எரிசக்தியில் இயங்கும் வாகனத்தை நோக்கி ஆட்டோமொபைல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது. குறைந்து வரும் எண்ணெய் வளம், தூய்மையான சுற்றுச் சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயம் இவையே பேட்டரி கார்களை நோக்கிய பயணத்துக்கு நிறுவனங்களை தள்ளியுள்ளது. இந்தியாவில் இன்னமும் பெருமளவில் பேட்டரி கார்கள் புழக்கத்துக்கு வரவில்லை.

ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 2010-ம் ஆண்டுகளிலிருந்தே இத்தகைய கார்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேட்டரி கார்கள் என்றாலே டெஸ்லா என பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அந்நிறுவனம் தவிர பல நிறுவனங்களின் பேட்டரி கார்கள் சந்தையில் உலா வருகின்றன என்பதுதான் நிதர்சனம். சர்வதேச அளவில் புழக்கத்தில் உள்ள பேட்டரி கார்களைப் பற்றிய கண்ணோட்டம் இதோ:

நிசான் லீஃப்

nissan-leaf 07

ஐந்து கதவுகளைக் கொண்ட ஹாட்ச்பேக் மாடலாக 2010-ம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் பிரபலமாக உள்ளது. 80 கிலோவாட் திறனை வெளிப்படுத்தும் இந்த காரின் இழு திறன் 280 நியூட்டன் மீட்டராகும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 107 கி.மீ. தூரம் ஓடக்கூடியது. இதன் விலை 30,680 டாலர் (ரூ. 20.80 லட்சமாகும்).

ஹூண்டாய் ஐயோனிக்

ஹூண்டாய் நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பை இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் ஆரம்பித்தது. இந்த காரில் 28 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதனால் இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரம் ஓடும். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை சான்றளித்துள்ளது இந்த காருக்கு கூடுதல் சிறப்பு. இந்த காரை 33 நிமிஷங்களில் 80 சதவீத அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். 50 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜிங் மையத்தில் 33 நிமிஷத்திலும் 100 கிலோவாட் திறன் கொண்ட சார்ஜிங் மையத்தில் 24 நிமிஷத்திலும் இந்த காரை சார்ஜ் செய்ய முடியும்.

ரெனால்ட் ஜோ

இந்த பேட்டரி உள்ள கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. கடந்த ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 150 கி.மீ. ஓடக்கூடிய பேட்டரி காரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செவர்லே போல்ட் இவி

இந்நிறுவனத்தின் போல்ட் பேட்டரி கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 383 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இது தயாரானது. இதன் விலை 29,995 டாலராகும். (ரூ. 20.30 லட்சம்).

ஃபோக்ஸ்வேகன் இ-கோல்ப் எக்ஸ்டீரியர்

நார்மல், எகோ மற்றும் எகோ பிளஸ் என்ற மூன்று வகையான தேர்வில் சாலையின் தன்மைக்கேற்ப வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். முன்புற மற்றும் பார்க் செய்யும்போது உதவும் சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

டெஸ்லா 3

இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 346 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. இந்தியா உள்பட பிரேசில், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த காரை அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பிஎம்டபிள்யூ ஐ3

சொகுசுக் கார்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் புகை வெளியிடாத முதலாவது பேட்டரி கார் இது. இதில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

bmw i3 07டெய்ம்லர் ஸ்மார்ட் ஃபார் டு

டெய்ம்லர் நிறுவனம் ஸ்மார்ட் ஃபார் டு என்ற பெயரில் புதிய பேட்டரி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தற்போது 18 நாடுகளில் பிரபலமாக உள்ளது. இந்தப் பிரிவில் 4-வது தலைமுறை காரை இந்நிறுவனம் 2016-ம் ஆண்டு பாரிஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

ஆடி இ-ட்ரோன்

2009-ம் ஆண்டிலிருந்தே பேட்டரி கார் தயாரிப்பில் ஆடி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இ-ட்ரோன் கான்செப்ட் கார்கள் டெட்ராய்ட் கண்காட்சியில் இடம்பெற்றன. இதையடுத்து பிராங்பர்ட் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற கண்காட்சியிலும் காட்சிப்படுத்தியது.

-ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x