Published : 12 Sep 2016 10:55 AM
Last Updated : 12 Sep 2016 10:55 AM
1918-ஆம் ஆண்டு பிறந்த நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்கத் தலைவர். மக்களாட்சி முறையில் தேர்வான முதல் தென்னாப்பிரிக்க அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் இவர். போராட்டங்களினால் தனது வாழ்வின் இருபத்தேழு ஆண்டுகளை இவர் சிறையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. அமைதிக்கான நோபல்பரிசு, இந்தியாவின் பாரத ரத்னா மற்றும் நேரு சமாதான விருது உட்பட, உலக நாடுகளின் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். மதிப்பிற்குரிய உலக தலைவர்களில் ஒருவரான இவர், 2013 ஆம் ஆண்டு தனது 95 வது வயதில் காலமானார்.
# நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்.
# எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்.
# உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே.
# ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்.
# பணத்தால் வெற்றியை உருவாக்கிவிட முடியாது.
# உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது.
# சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை.
# ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை.
# தண்ணீர் கொதிக்கத் துவங்கும்போது அதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்.
# நாட்டின் குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்த நாடும் உண்மையில் மேம்பாடடைய முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT