Published : 22 Aug 2016 11:48 AM
Last Updated : 22 Aug 2016 11:48 AM

டயர்களில் காற்றழுத்தம் காட்டும் கருவி!

பொதுவாக வாகனங்கள் வைத்திருப்போர் வாகன செயல்பாடுகளை பெரிதாகத் தெரிந்து கொள்வதில்லை. மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் பெட்ரோல் போடும் சமயங்களிலோ அல்லது நினைவு வரும்போதோ டயர்களில் காற்று நிரப்பிக் கொள்வர். சில பல சமயங்களில் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் காற்று நிரப்பும் வசதி இல்லாது போகும், அல்லது காற்று நிரப்பும் பகுதியில் பணியாளர்கள் இருக்க மாட்டார்கள். வேலை அவசரத்தில் அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என செல்வோரே அதிகம்.

வாகனங்களின் சீரான இயக்கத்தில் டயர்களின் காற்றும் மிக முக்கியம். பஞ்சராகி வண்டியைத் தள்ளும் நிலை ஏற்படும்போதுதான் காற்றின் அருமை புரியும். கார்களாயிருந்தால் நடுவழியில் பிரச்சினை ஏற்பட்டாலன்றி டயரைப் பற்றி பலரும் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.

பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு டயரின் காற்று குறைபாடு அல்லது டயர் வெடிப்பது போன்றவையும் காரணமாக இருந்துள்ளன.

இந்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில் புதுச்சேரியைச் சேர்ந்த மனாடெக் நிறுவனம் வாகனங்களின் கார் காற்றழுத்தத்தைக் கண்டறியும் கருவியைத் தயாரித்துள்ளது. ஆட்டோ மொபைல் உதிரி பாகத் தயாரிப்பில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட மனாடெக் நிறுவனம் தற் போது காற்றழுத்த கருவியை உருவாக்கி யுள்ளது. டயர் காற்றழுத்தத்தினை அறிய உதவும் கருவியை (Tyre Pressure Monitoring System) இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கியுள்ளது.

இக்கருவியானது காரின் டேஷ்போர் டில் பொறுத்தப்படும். டயர்களின் காற் றழுத்தத்தைக் கண்காணிக்கும் உணர் கருவி நான்கு சக்கரங்களிலும் இணைக் கப்படும். இதன் தொடர்பு டேஷ்போர்டில் உள்ள காரில் இணைக்கப்படுவதால், காரில் உள்ள டயர்களில் காற்றழுத்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.

போதிய அளவு காற்று குறையும் போது இந்த கருவி எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதன் மூலம் காரின் உரிமையாளர் அல்லது டிரைவர் டயர்களில் காற்றை நிரப்பிக் கொள்ள முடியும்.

போதிய அளவு காற்றழுத்தம் டயர்களில் இருந்தால் அதன் ஆயுள் காலமும் அதிகரிக்கும். விபத்து ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

காரின் நிர்வாக செலவைக் குறைக்க இந்தக் கருவி உதவுவதோடு பாதுகாப்பான பயணத்துக்கும் வழிவகுக்கிறது. இது கார் உரிமையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x