Published : 01 Aug 2016 01:15 PM
Last Updated : 01 Aug 2016 01:15 PM

டொயோடாவின் பேட்டரி கார்

கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டொயோடா நிறுவனம் நகரப் போக்குவரத்துக்கு பேட்டரி மோட்டார் காரை அறிமுகப் படுத்தியுள்ளது. இதற்கு ஐ-ரோடு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆட்டோ போன்று 3 சக்கரத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 2 சக்கரமும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் உள்ளவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறப்பாக செயல்படுவதற்காக இதில் லிதியம் ஐயான் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. தூரம் வரை இது ஓடுமாம்.

மோட்டார் சைக்கிளைப் போல இதை இயக்குவது எளிது. இதில் பயணம் செய்யும்போது மழை பெய்தால் நனையமாட்டோம். அதேசமயம் இதில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியமும் இருக்காது. மூன்று சக்கரங்களில் இயங்குவதால் இது ஸ்திரமாக ஓடும். இதன் நீளம் 2.30 மீட்டர் நீளமும், 1.4 மீட்டர் உயரமும் 0.87 மீட்டர் அகலமும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அகலம் குறைவாக இருப்பதால் இதை பார்க் செய்வது மிகவும் எளிதாகும்.

2013-ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த மோட்டார் கார் முதன் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாற்றங்களுடன் தற்போது சோதனை ஓட்டத்துக்கு தயாராகியுள்ளது.

சாலைகளில் இதன் பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை பரிசோதிப்பதற்காக சோதனை ஓட் டத்தை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக ஜப்பானில் முக்கிய நகரங்களில் இது இயக்கப்படுகிறது.

இந்தக் காருக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற நாடுகளில் இந்தக் காரை அறிமுகப்படுத்த டொயோடா திட்டமிட்டுள்ளது.

இந்த மோட்டார் கார் விரைவில் இந்தியச் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x