Published : 04 Jan 2016 06:38 PM
Last Updated : 04 Jan 2016 06:38 PM

இந்திய தொழிலதிபர்களின் அடுத்த கட்டம்?

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு புறம் இருக்க புது வருடத்தில் நம்மிடம் என்ன மாற்றத்தை கொண்டு வர இருக்கிறோம் நம் இலக்கு என்ன என்பதை பற்றியும் சிந்திக்கவேண்டும். அப்படி இலக்கை நிர்ணயித்து புதிய திட்டங்களோடு பயணிப்பவர்கள் தொழிலதிபர்கள். புது வருடத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையவேண்டும் என்பதை நிர்ணயித்து செயல்படுவார்கள். பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைத்து கொண்டு வருகிறார்கள். இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்கள் 2016-ல் என்ன திட்டத்தோடு இருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.



முகேஷ் அம்பானி

n ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2015-ம் ஆண்டின் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.

n கடந்த வருடம் பார்ச்சூன் இந்தியா வெளியிட்ட தலைசிறந்த 500 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 3,82,565 கோடியுடன் முதலிடத்தை பெற்றது என கடந்த வருடம் சிறப்பாக இருந்தது.

n முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை தற்போது பணியாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி உள்ளது.

n இந்த வருடம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.

n அறிமுகப்படுத்திய 100 நாள்களில் 1 மில்லியன் சந்தாதாரர்களை அடைய ரிலையன்ஸ் ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது.



விஷால் சிக்கா

இன்ஃபோசிஸ் நிறுவனம் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் விஷால் சிக்காவை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தது.

n இந்தப் பொறுப்புக்கு வந்த பொழுது விஷால் சிக்கா முன் மோசமான நிதி முடிவு, பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு என நிறைய சவால்கள் இருந்தன.

n இதையெல்லாம் மாற்றி 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.12,770 கோடியாக உள்ள வருமானத்தை 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14,354 கோடி ரூபாயாக உயர்த்தி காட்டியுள்ளார்.

n 2016-17-ம் ஆண்டில் 13-15 சதவீத வளர்ச்சியை அடைவோம் என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறார் விஷால் சிக்கா.

n மேலும் டிசிஎஸ், காக்னிசெண்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் இன்போசிஸ் நிறுவனத்துக்கு இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதும் விஷால் சிக்காவின் திட்டமாக இருக்கிறது.



கவுதம் அதானி

n 1000 கோடி டாலர் சொத்து மதிப்பை கொண்ட அதானி குழுமத்தின் தலைவராக கெளதம் அதானி இருந்து வருகிறார்.

n நிலக்கரி, லாஜிஸ்டிக்ஸ், மின்சாரம் ஆகிய துறைகளில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் அதானி குழுமம் 2014-15 நிதியாண்டில் 17 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.

n 670 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

n முந்தராவில் 1 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க இருக்கிறார்.

n ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட இருக்கிற சுரங்கம் மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு உள்ள பிரச்சினைகளை சரி செய்து அதைத் தொடங்க இருக்கிறார்.



அஜய் சிங்

n ஒரு வருடத்திற்கு முன்னால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு சிக்கல்களில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து மீண்டு மிகக் குறைவான கட்டணத்தில் விமான சேவையை வழங்கும் லாபகரமான நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

n இந்த மாற்றம் அஜய் சிங் நிறுவனத்தை வாங்கிய பிறகு நிகழ்ந்துள்ளது என்று கூறுகின்றனர்.டெல்லியைச் சேர்ந்த அஜய் சிங் 2016-ம் ஆண்டில் நிறைய இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.

n முதற்கட்டமாக போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து 15 விமானங்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறார்.

n இந்திய விமான துறையில் அனைத்து பெரிய நடவடிக்கைகளும் தற்போது அஜய் சிங் மற்றும் ஸபைஸ்ஜெட் நிறுவனத்தை மையமாக வைத்துதான் பார்க்கப்படுகிறது.



சச்சின் பன்சால் & பின்னி பன்சால்

n 2016-ம் ஆண்டுடன் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகப் போகும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

n இந்நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன் இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள். மேலும் இந்நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன் மூன்று வருடம் மக்களிடம் சென்று கருத்துகளை கேட்டுள்ளார்கள்.

n ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்போது இ-காமர்ஸ் வர்த்தகத்தில் 44 சதவீத சந்தையை பிடித்துள்ளது.

n தொடர்ந்து வாடிக்கையாளரை ஈர்க்க சலுகைகளை வழங்குவதால் இலாபத்தை அடையவில்லை. இன்னும் இரண்டு வருடங்களில் ஃபிளிப்கார்ட் லாபத்தை அடையும் என்று வால்ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.



விஜய் சேகர் ஷர்மா

n மொபைல் வாலட் மற்றும் மொபைல் வர்த்தகத்தில் கடந்த ஆண்டு மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்த நிறுவனம் விஜய் சேகர் ஷர்மா நிறுவிய பேடிஎம் நிறுவனம்.

n இந்தியாவில் மிக அதிகம் பயன்படுத்தும் மொபைல் வாலட் பேடிஎம். தற்போது 10 கோடி பேர் இந்த மொபைல் வாலட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

n கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலிபாபா நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது.

n மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப் உரிமையை பெற்றுள்ளது.

n 2015-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்ட பேடிஎம் நிறுவனம், கட்டண வங்கி நடத்தும் உரிமைக்காக இந்த மாதத்தில் கோரிக்கை வைக்க இருக்கிறது.



பாபா ராம்தேவ்

n பதஞ்சலி நிறுவனம் தொடங்கி 10 வருடங்கள் ஆகப் போகிறது.

n நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸை நீதிமன்றம் தடை செய்த போது அந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந் நிறுவனம் புதிதாக பதஞ்சலி நூடுல்ஸை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது.

n நூடுல்ஸ், பிஸ்கட், கார்ன் பிளாக்ஸ் உட்பட 350 பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

n கடந்த வருட விற்பனை ரூ.2,000 கோடி

n ஹரித்வாரில் 150 கோடி ரூபாய் மதிப்பில் புட் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

n பொருட்கள் விற்பனைக்காக மெகாமார்ட்டுகளை அமைக்கவும் பெரிய ரீடெய்ல் இணைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

n கடந்த அக்டோபர் மாதம் பியூச்சர் குரூப்புடன் இணைத்து கொண்டது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x