Published : 08 Aug 2016 11:11 AM
Last Updated : 08 Aug 2016 11:11 AM
ஒலிம்பிக்.இந்த வார்த்தையே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவாக இருந்து வருகிறது. அதுபோல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஒவ்வொரு நாடும் கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒரு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்திவிட்டால் அந்நாட்டிற்கு பொருளாதார அளவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
அதனாலேயே ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு நாடு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் போது அந்நாட்டில் சுற்றுலா, உற்பத்தி, வேளாண்மை, சேவைத் துறைகள் என அனைத்தும் வளர்ச்சி பெறுகிறது. 2008-ம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது 65 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் வர்த்தகம் பெருகும். முதலீடுகள் குவியும்.
இப்படித்தான் ஒலிம்பிக் மிகப் பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கும் மிகப் பெரிய தொகை செலவிடப்படுகிறது. சில நாடுகளில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்ட பிறகு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. ஆக ஒலிம்பிக் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒலிம்பிக் போட்டியில் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிய சில தகவல்கள்…..
1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் போட்டிக்கு பிறகு அந்நாட்டிற்கு வரும் முதலீடு 14 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாக அதிகரித்தது.
2004-ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உள்நாட்டு செலவு விகிதம் 6.8 சதவீதத்திலிருந்து 9.3 சதவீதமாக அதிகரித்தது.
தற்போது நடைபெற்று வரும் ரியோ 2016 ஒலிம்பிக் நடத்தப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட செலவுத் தொகை.
மக்கள் பங்களிப்பு
ஒரு நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் பொழுது ஏற்படும் செலவுகளில் மக்களும் பங்கெடுப்பார்கள். அவர்கள் வரிகள் மூலம் தங்களது பங்களிப்பை செய்வார்கள்.
இந்தியர்கள் மிக குறைவாகவே ஒலிம்பிக் போட்டியை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த ஆய்விலிருந்து சில தகவல்கள்…
30 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் கிரிக்கெட்டில் ஒலிம்பிக் பதக்கத்தை இந்தியா வெல்லும் என்று தெரிவித்தவர்கள்.
2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவை 400 கோடி மக்கள் பார்வையிட்டனர். 20 மில்லியன் மக்கள் லண்டனுக்கு வந்திருந்தனர். 1400 கோடி டாலர் திரட்டப்பட்டது.
1992-ம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அந்நாட்டிற்கு வரும் முதலீடு 12 சதவீதத்திலிருந்து -0.4 சதவீதமாக குறைந்தது.
2000-ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கும் முன்பு வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதமாக இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு 2.9 சதவீதமாக அதிகரித்தது.
புதுடெல்லியில் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தியதாக தெரிவித்தவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT