Published : 23 Jan 2017 12:07 PM
Last Updated : 23 Jan 2017 12:07 PM
சர்வதேச அளவில் இரு முக்கியமான விஷயங் கள் கடந்த வாரம் நிகழ்ந்தன. உலக பொருளா தார மையத்தின் 47-வது ஆண்டு கூட்டம் ஸ்விட் சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நடைபெற்றது. அடுத்து அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி ஏற்றார். உலக பொருளாதார மையத்தில் டொனால்ட் ட்ரம்போ அல்லது அவர் சார்பாகவோ யாரும் கலந்துகொள்ள வில்லை. ஆனாலும், உலக பொருளாதார மையத்தின் மைய விவாதமாக ட்ரம்ப் இருந்தார்.
கடந்த ஆண்டின் விவாத பொருளாகவும் ட்ரம்ப் இருந்தார். அப்போது பெரும்பாலானவர்கள் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறினர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப் வெற்றிக்கும், உலக பொருளாதார மையத்துக்கான தேவைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றலாம். அதை பார்ப்பதற்கு முன்பு உலக பொருளாதார மையம் குறித்து பார்க்கலாம்.
உலகப் பொருளாதார மையம்
ஐரோப்பிய நிர்வாக மையம் என்னும் பெயரில் 1971-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் க்ளாஸ் ஷ்வாப் இந்த அமைப்பை உருவாக்கினார். தொடக்கத்தில் 444 பிரதிநிதிகள் மட்டுமே பங்குபெற்றனர். 1987-ம் ஆண்டு உலக பொருளாதார மையம் என பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்பில் சர்வதேச அளவிலான அரசியல் பொருளாதார மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்த ஆண்டு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், வங்கியாளர்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டிருக்கின்றனர்.
கடல் மட்டத்தில் இருந்து 5,100 அடி உயரத்தில் இருக்கும் கிராமத்தில் இந்த மாநாடு நடத்தப்படும். வழக்கமாக இந்த கிராமத்தின் மக்கள் தொகையே 11 ஆயிரம்தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மட்டும் சர்வதேச பிரதிநிதிகள் 3,000 பேர் கலந்துகொள்கின்றனர். சுமார் 1,700-க்கு மேற்பட்ட தனிநபர் விமானங்கள் இந்த ஒரு வார காலத்தில் அந்த மலைப்பகுதியில் தரை இறங்கு கின்றன. இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் கள், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முக்கியமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கட்டணம் அதிகம்
உலகமயமாக்கல், வர்த்தக விவகாரங்கள், ஏழ்மை, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்தல் உள்ளிட்ட பல விஷயங் கள் பற்றி இங்கு விவாதிக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச் சியில் கலந்து கொள்பவர்களுக்கான கட்டணம் மிக அதிகம். உறுப்பினர் கட்டணம், பயணம் உள்ளிட் டவை சேர்த்து ஒருவருக்கு சுமார் 40,000 டாலர் வரை செலவாகும். ஆனால் இதில் கலந்துகொள்ள இருப் பவர்கள் பணக்காரர்கள், நாடுகளின் தலைவர்கள் என்பதால் பணம் ஒரு பிரச்சினை இல்லை.
ஆண்டு கட்டணம் 5.85 லட்சம் டாலர் செலுத்துபவர்களுக்கு இலவச அனுமதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 100 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். மற்ற நாடுகளுக்கு இந்த தொகை சாத்தியம் இல்லாதது. ஏழ்மை வறுமை குறித்து விவாதிக்கும் போது யாருக்காக விவாதிக்கிறார்களோ அவர்களே கலந்துகொள்ள முடியாத சூழல் இருப்பதாக கேர் ரேட்டிங்ஸ் தலைமை பொருளாதார வல்லுநர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டு கூட்டத்திலும் அடுத்த வருடம் சிறப்பாக இருக்கும் என்று முடிக்கிறார்கள். ஆனால் பேசிய விஷயங்கள் எதுவும் செயல்பாட்டில் நடப்பதில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப்
நடந்து முடிந்த அமர்வு முழுவதுமே ட்ரம்ப் என்ன செய்வார் என்பது குறித்த விவாதங்களே அதிகம் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் கூறும்போது, நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் அவர் இல்லாமல் எதுவும் நடக்காது. யார் தோற்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்வார். ஆனால் அவரே தோல்வியடைவார். அவர் தோற்க வேண்டும் என்பதற்காக இதனை சொல்லவில்லை, அவர் நம்பும் கொள்கைகளே அவரை பின்னுக்கு தள்ளும் என்று குறிப்பிட்டார்.
கேர் ரேட்டிங்ஸ் பொருளாதார வல்லுநர் கூறும் போது, டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்றது மற்றும் பிரெக்ஸிட் ஆகிய விவகாரங்கள் உலகமய மாக்குதலையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. எங்கள் நாட்டில் (அமெரிக்காவில்) உற்பத்தி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து பணியாளர் கள், பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று கூறுபவர் ட்ரம்ப். இவரது நடவடிக்கையால் சர்வ தேச அளவில் ஒரு மந்த நிலை உருவாகும். இதனால் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளே அதிகம் பாதிக்கப்படும்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பட்சத்தில், இங்கிலாந்தில் இருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான உறவுகள் முற்றிலும் வேறாக இருக்கும். இங்கிலாந்து வழியை பிரான்ஸ் உள்ளிட்ட இதர ஐரோப்பிய யூனியன் நாடுகள் பின்பற்றலாம்.
இந்த இரு சர்வதேச விஷயங்களும் அனைத்து விதமான சர்வதேச ஒப்பந்தங்களையும் கேள்விக்குள் ளாக்குகின்றன. சர்வதேச ஒப்பந்தங்கள், உலக மயமாக்கல் போன்றவை முக்கியம் இல்லாமல் போகும் போது, உலக பொருளாதார மையத்துக் கான தேவையும் இல்லாமல் போகும். தவிர உலக வர்த்தக மையத்தின் (டபிள்யூ.டி.ஓ) எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் என்று கூறினார்.
உலமயமாக்கலை குற்றம் சொல்ல முடியாது
ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருக்கும் நாடு சீனா. அந்த நாட்டின் அதிபர் ஸி ஜிங் பிங் முதல் முறையாக இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். உலகமயமாக்கல் காரணமாக சர்வதேச அளவிலான பொருளாதார பிரச்சினைகள் உருவாகியுள்ளன. ஆனால் அதற்காக உலகமயமாக்கலை குற்றம் சொல்ல முடியாது. உலகமயமாக்கலை முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.
சர்வதேச அரங்கில் இருந்து அமெரிக்கா தன்னை தனிமை படுத்திக்கொள்வது என்பது இருட்டு அறையில் தனியாக இருப்பதற்கு சமம். காற்று, வெளிச்சம், மழை ஆகியவை அந்த அறைக்கு வெளியே இருக்கும். அமெரிக்கா தனிமை படுத்திக் கொள்வதன் மூலம் யாருக்கும் பயன் இல்லை என அமெரிக்காவின் தற்போதைய உத்தியை மறைமுகமாக ஜிங் பிங் குற்றம் சாட்டி இருக்கிறார்.
ட்ரம்ப் ஆறு மாதங்கள் ஆட்சியில் இருந்தால் மட்டுமே அடுத்த என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவு உருவாகும். சர்வதேச அரங்கில் இருந்து அமெரிக்காவை தனிமை படுத்திக்கொள்வாரா, வளரும் நாடுகளின் பொருளாதாரம் எப்படி இருக்கும், இதுபோன்ற மாநாடுகளுக்கு தேவை இருக்குமா என்பது இன்னும் சில காலங்களுக்கு பிறகே தெரிய வரும். சீனாவுக்கு மட்டுமல்லாமல் இந்திய ஐடி துறை யின் அடுத்த கட்டமும் இன்னும் சில நாட்களுக்கு பிறகே தெரியவரும். ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு இவர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்?
வாசு கார்த்தி
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT