Published : 29 Aug 2016 10:13 AM
Last Updated : 29 Aug 2016 10:13 AM
1919 ம் ஆண்டு பிறந்த மால்கம் போர்ப்ஸ் அமெரிக்க தொழிலதிபர் மற்றும் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகையின் வெளியீட்டாளர். பட்டப்படிப்பை முடித்த பிறகு சில காலம் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். சில வருட அரசியல் வாழ்க்கை மற்றும் தனது தந்தை, சகோதரர் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தன்னை முழுமையாக பத்திரிகைத் தொழிலில் ஈடுபடுத்தி கொண்டார். தனது தலைமையின் கீழ் சீரான வளர்ச்சியினையும் ஏற்படுத்தினார். 1990-ம் ஆண்டு தனது எழுபதாவது வயதில் மாரடைப்பினால் காலமானார்.
தனக்காக எதுவுமே செய்யாத மற்றவர் களை ஒருவர் எப்படி நடத்துகிறார் என்பதன் மூலம் அவரது குணத்தை உங்களால் எளிதாகத் தீர்மானிக்க முடியும்.
பலரும், அவர்கள் எவ்வாறு இல்லையோ அதற்கு அதிகமாகவும், அவர்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அதற்கு குறைவாகவும் தங்களை மதிப்பீடு செய்துகொள்கிறார்கள்.
உள்ளார்ந்த பார்வையே சிறந்த பார்வை.
எதுவுமே செய்யாமலிருப்பதே, அனைத்திலும் கடினமான பணி.
அறிவுரை பெறுவதைவிட கொடுப்பது மிகவும் வேடிக்கையானது.
மனிதனை அளவிட வேண்டுமானால், அவனது இதயத்தை அளவிட வேண்டும்.
சிந்தனையாளர்கள் மறைந்துவிடுகிறார்கள், எண்ணங்கள் என்றும் அழிவதில்லை.
தோல்வியும் வெற்றியே, அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டால்.
எப்பொழுது தோல்வியைப்பற்றி அறிந்து வைத்துள்ளீர்களோ. அப்போது வெற்றி இனிமையானதாக உள்ளது.
பிரச்சினைகளை பற்றி அதிகம் தெரியாதபோது தீர்வுகளை பரிந்துரைப்பது மிகவும் சுலபம்.
எப்போது கனவு காண்பதை நிறுத்திவிடுகிறீர்களோ, அப்போது வாழ்வதையும் நிறுத்திவிடுகிறீர்கள்.
உரையாடலின் கலை, அதை கவனமாக கேட்பதிலேயே உள்ளது.
யார் சத்தமாக பேசுகிறார்களோ, அவர்கள் அரிதாகவே கேட்கிறார்கள்.
உங்களால் செயல்பட முடியாது என்றால், நீங்கள் உந்துதலை எதிர்பார்க்க வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT